வெளிநாட்டு சுற்றுலா- வேலைவாய்ப்பு? பிகே.வுக்கே வெளிச்சம்: ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதில்
சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை 8 மாதங்களில் 10 மடங்கு அதிகரித்து 49.8% ஆகியிருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர்கள் பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ ஆகியோர் காட்டமாக பதில் அளித்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் #UnemploymentCrisis 8மாதங்களில் 10 மடங்கு அதிகரித்து 49.8% ஆகியிருக்கிறது! 90% வீடுகளில் ஒருவர் வருமானம் இழந்திருக்கிறார்!

வெளிநாடு சுற்றுலா, MoU மூலம் பெறப்பட்ட முதலீடுகள் & உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து @CMOTamilNadu வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! என வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, @mkstalin உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் கிடையாது என்பது உலகறிந்த விஷயம். துண்டுச்சீட்டு எழுதிக்கொடுக்கும் ஆட்களிடமாவது சரியான தகவலை கேட்டு பெறுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மற்றொரு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில், வெளிநாட்டு சுற்றுலா மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்பு எப்படி அதிகரிக்கும் என்பது அந்த @PrashantKishor க்குத்தான் வெளிச்சம்! இதே @_CMIE அறிக்கை சொல்வது, முழு ஊரடங்கு அமல்படுத்திய உடன் ஏப்ரலில் 49.8% இருந்த வேலையின்மை @CMOTamilNadu அவர்களின் வியூகத்தால் ஜூலையில் 8.1% ஆக குறைந்துள்ளது! என பதிலளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications