எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி- தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் ஆப்சென்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பரிசோதனைக்காக மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது குடலிறக்கம் பிரச்சனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த வாரம் ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் பரிசோதனைக்காக எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். அன்றே அவர் வீடு திரும்பிவிட்டார்.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் இன்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி அதே எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனேகமாக இன்றே எடப்பாடி பழனிசாமி வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. மேலும் அதிமுக தொண்டர்கள், எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறதாம்.

பசும்பொன் தேவர் குருபூஜை

பசும்பொன் தேவர் குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கருத்துக்கு பல்வேறு சீனியர் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இபிஎஸ் மவுனம்

இபிஎஸ் மவுனம்

ஆனால் இதுவரை எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-க்கு பகிரங்கமாக பதில் எதுவும் கூறவில்லை. தேவர் குருபூஜையில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுப்பார் எனவும் கூறப்பட்டது. மேலும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க முக்குலத்தோர் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சில சுவரொட்டிகள் சமூக வலைதளத்தில் பகிரவும் செய்யப்பட்டன. இந்த நிலையில் நாளை தேவர் குருபூஜையில் திட்டமிட்டபடி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா? என்பது சந்தேகம் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள். சட்டசபை தேர்தலின் போதே வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு கொடுத்ததற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தென் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் பிரசாரம் செய்ய கூட முடியாத நிலை இருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.

சசிகலா பயணம்

சசிகலா பயணம்

இதனிடையே தென்மாவட்டங்களில் சசிகலா தனது சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதுவும் ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் அதிமுக கொடியுடன் சசிகலாவின் பயணம் தொடங்கி உள்ளது. இந்த பின்னணியில் எடப்பாடி பழனிசாமி, தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தால் சசிகலா-ஓபிஎஸ் தரப்பின் கையே தென்மாவட்டங்களில் ஓங்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+