தேர்தல் திருவிழா- அதிமுக தேர்தல் பணிக்குழு, நவ. 20 அழகிரி, நவ. 21 அமித்ஷா, நவ.23 ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எனும் அரசியல் திருவிழா களைகட்ட தொடங்கிவிட்டது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளன.
Recommended Video
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணிகளில் படுபிஸியாக இருக்கின்றன்ன.
ஆளும் அதிமுக அண்மையில் தேர்தல் பணிக்குழு, தேர்தல் அறிக்கை குழு, ஊடகங்களை எதிர்கொள்ளும் குழு என பல குழுக்களை அறிவித்தது. திமுகவில் ஏற்கனவே தேர்தல் அறிக்கை குழு அறிவிக்கப்பட்டு அந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கை உருவாக்கப்படுகிறது.

அமித்ஷா வருகை
தமிழகத்தில் எப்படியாவது வேர்பிடிக்க முடியுமா? என வேல் யாத்திரை உள்ளிட்டவைகளால் ஆழம்பார்த்து கொண்டிருக்கிறது பாஜக. இச்சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார். அமித்ஷாவின் வருகையை முன்வைத்து ஏகப்பட்ட ஹேசியங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருக்கின்றன.

நாதக, மநீம
நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரசாரம் என களத்தில் நிற்கிறது. மக்கள் நீதி மய்யம் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் என அறிவித்திருக்கிறது. இந்த பரபரப்புகளுக்கு நடுவே மாயமாகிப் போகி இருந்த மு.க. அழகிரி தம் பங்குக்கு கோதாவில் குதித்துவிட்டார்.

மதுரையில் அழகிரி ஆலோசனை
மதுரையில் தமது ஆதரவாளர்களுடன் வரும் 20-ந் தேதி அழகிரி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தனிக் கட்சி தொடங்குவது குறித்து விவாதிக்கிறாராம். பின்னர் 21-ந் தேதி அமித்ஷாவை சென்னையில் மு.க. அழகிரி சந்திக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

திமுக ஆலோசனை
இச்சூழ்நிலையில் திமுக வரும் 23-ந் தேதி உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கிவிட்டது என்பதையே அடுத்தடுத்த அரசியல் கட்சிகளின் ஆட்டங்கள் வெளிப்படுத்துகிறது.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி












Click it and Unblock the Notifications