நாளை தைப்பூசம்.. தமிழ்நாடு முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்கும்.. தமிழக அரசு குட் நியூஸ்!
சென்னை: தைப்பூசம் நாளான நாளை (பிப்ரவரி 11) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சித்திரை முதல் நாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில், சொத்து பத்திரங்களை பதிவு செய்ய, பலரும் விரும்புகின்றனர். ஆனால், இந்த நாட்கள் அரசு விடுமுறை என்பதால், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதில்லை.

இதனால், மக்கள் தங்களுக்கு விருப்பமான மங்களகரமான நாட்களில், பத்திரப்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.
அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் அரசு பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் சில மங்களகரமான நாட்களில் பொது மக்களால் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில், முக்கிய நாட்களில் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அன்றைய நாட்களில் அதிகமான அளவில் பத்திரப் பதிவுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நாளை 11.02.2025 (செவ்வாய்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10 மணி முதல் மாலை 6 வரை இயங்கும். விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவுச் சட்டம் கீழுள்ள Table of fees இனம் 17(3)-ன் ஏ,பி,சி-ல் கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூச நாளான நாளை, ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான ஹெல்ப் டெஸ்க் மற்றும் உதவி எண் வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட வேண்டும். துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பெளர்ணமி இணைந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபடுவார்கள். கடன் தொல்லை, கல்யாணம் என பிரச்சனைகள் இருப்பவர்கள் தைப்பூசம் அன்று விரதம் இருந்தால் நல்ல நிகழ்வுகள் நடக்கும் என்பது நம்பிக்கை. நல்ல நாளான அன்று பத்திரப் பதிவு மேற்கொள்ளவும் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இதையொட்டியே, நாளை முழு நாளும், பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications