தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா; 92 பேர் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமையன்று ஒரேநாளில் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 92 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 6110 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மாநிலங்கள் அளவில் தமிழ்நாடு 3-வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவும் ஆந்திராவும் முதல் 2 இடங்களில் இருக்கின்றன.

தமிழகத்தில் வியாழக்கிழமை மட்டும் ஒரேநாளில் 5892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 4,45,851 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 92 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,608 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6110 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 3,86,173.
தமிழகத்தில் மொத்தம் 52,070 பேர்தான் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் சென்னையில் இன்று 1,000க்கும் கீழே கொரோனா பாதிப்பு உறுதியானது.
சென்னையில் மொத்தம் 968 பேருக்கும் பிற மாவட்டங்களில் 4924 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் கோவை, கடலூர் மாவட்டங்களில் 500ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. கோவையில் 593, கடலூரில் 590 பேருக்கும் வியாழக்கிழமையன்று கொரோனா உறுதியானது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications