தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 1,755 - உயிரிழப்பு 22

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய சோதனையில் 72 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக இருப்பது தெரியவந்தது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

TN reports 72 new coronavirus cases, total at 1755

இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்தது. சென்னையில் பெரும்பாலாலும் இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

98 வயது முதியவர் ஒருவருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட 6 பேருக்கும் சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானது.

சென்னையைத் தொடர்ந்து கோவையில் 7 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 1; நாகையில் 4; ராமநாதபுரத்தில் 2; சேலத்தில் 1 மற்றும் தென்காசியில் ஒருவருக்கு என மொத்தமாக தமிழகத்தில் 72 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN reports 72 new coronavirus cases, total at 1755

தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1755. தமிழகத்தில் இன்று மேலும் 2 பேர் கொரோனாவால் மரணமடைந்தனர்.

இதனால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 22 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் இன்று மட்டும் 114 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 866. தற்போது 867 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+