தென்மாவட்ட பயணிகளுக்கு எஸ்இடிசி சர்ப்ரைஸ்.. 50 புது ரூட்! திருவான்மியூர் ஆவடிக்கு வரும் பேருந்துகள்
சென்னை: திருவான்மியூர், திருவொற்றியூர், ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 50-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம் என முக்கிய நகரங்களுக்கு இந்த பேருந்துகள் செல்கின்றன. அதேபோல, சென்னையில் இருந்து பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளி மாநில முக்கிய நகரங்களுக்கும் எஸ்இடிசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகளில் நாள் தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். 300 கிலோ மீட்டர் தூரத்துக்கும் கூடுதலான தொலைவு உள்ள இடங்களுக்கு சொகுசு பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. ஏசி, செமி ஸ்லீப்பர், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.
பயணிகளை ஈர்க்கும் வகையில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையான வசதியுடன் பேருந்தை நவீனமயப்படுத்தி வருகிறது போக்குவரத்து கழகம். நவீன தானியங்கி தீயணைப்பு கருவி பொருத்தப்பட்ட 50 புதிய பேருந்துகள் (29 ஏ.சி. வசதி இல்லாத பஸ்கள், 21 ஏ.சி. பஸ்கள்) வருகிற மே மாதம் முதல் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்பட இருக்கிறது.
அதுமட்டும் இன்றி பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட 25 வழித்தடங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக வட்டார தகவல்கள் கூறுகின்றன.
நேற்று ஜெயங்கொண்டம்-பெங்களூர் வழித்தடத்தில் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் இந்த பேருந்து இரவு 8 மணிக்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு அரியலூர், குன்னம், பெரம்பலூர், ஆத்தூர், சேலம், ஓசூர் வழியாக மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பெங்களூரை சென்றடையும். மறுமார்க்கத்தில் தினமும் இரவு 9 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு அதே மார்க்கத்தில் மறுநாள் காலை 6 மணிக்கு ஜெயங்கொண்டத்தை வந்தடைகிறது.
இந்த நிலையில், திருவான்மியூர், திருவொற்றியூர், ஆவடி ஆகிய இடங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த இடங்களுக்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை திருவான்மியூரில் இருந்து நெல்லை, திருச்செந்தூருக்கு ஏற்கனவே அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
எனினும், இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பீல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் தெரியவரும். எனினும், 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துள் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications