சென்னை மக்களே குட்நியூஸ்.. கோவை, கன்னியாகுமரி, ஈரோடு, தென்காசி செல்ல சிறப்பு ரயில்கள்.. விவரம்
சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை போத்தனூர் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை போத்தனூரில் இருந்து வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் (06028), அதேநாள் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (06027) மறுநாள் காலை 5.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் :

சென்னை கன்னியாகுமரி ரயில்
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண். 06045), நாளை மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வருகிற 3-ந்தேதி இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (06046), மறுநாள் காலை 11.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
சென்னை ஈரோடு ரயில்
ஈரோட்டில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.20 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் (06026), இன்று மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் வரும் சிறப்பு ரயில் (06025), நாளை அதிகாலை 5.15 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.
சென்னை கோவை ரயில்
கோவை போத்தனூரில் இருந்து வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் (06028), அதேநாள் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (06027) மறுநாள் காலை 5.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
சென்னை தென்காசி ரயில்
தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:00 மணிக்கு தென்காசிக்கு செல்லும். செங்கோட்டையில் இருந்து வரும் 3ம் தேதி இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்கு தாம்பரம் வரும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக கோடைக்காலத்தில் ரயில்கள் அறிவிப்பது வழக்கம் என்றாலும் அந்த டிக்கெட்டைப் பிடிப்பது மக்களுக்கு ஒரு 'போராட்டம்' தான். குறிப்பாகக் கோடை விடுமுறை நேரத்தில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே 'Regret' அல்லது 'Waitlist' வந்துவிடுகிறது என்பது கசப்பான உண்மை.
டிக்கெட் கிடைக்காத சாமானிய மக்களுக்கு இதோ சில மாற்று வழிகளை பின்பற்றலாம், தட்கல் & பிரீமியம் தட்கல்: இது கடைசி நேர நம்பிக்கை. பயணம் செய்வதற்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு மற்றும் 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும். ஆனால், உங்கள் இணைய வேகம் மின்னல் வேகத்தில் இருக்க வேண்டும்.
அதேநேரம் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் அதே நேரத்தில், தமிழக அரசு முக்கிய நகரங்களுக்குச் சிறப்புப் பேருந்துகளையும் இயக்கும். ரயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள் உடனடியாக டிஎன்எஸ்டிசி ஆப் மூலம் முன்பதிவு செய்வது பாதுகாப்பானது. நீங்கள் முன்பதிவு செய்யவில்லை என்றாலும், சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு, அந்தச் சிறப்பு ரயில்களில் இருக்கும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கலாம். (கொஞ்சம் நெரிசல் அதிகமாக இருக்கும், ஆனால் ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம்).
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications