தரமான 3-வது சம்பவம்.. நாளை இரவு வரை சென்னையில் மிக அதிக கனமழை.. இது சும்மா டிரெய்லர்தான்.. வெதர்மேன்
சென்னை: சென்னை உள்பட வட தமிழகத்தின் மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை அல்லது நாளை இரவு வரை மிக கனமழை பெய்யும் என்றும் இது இந்த வடகிழக்கு பருவமழையின் 3ஆவது சம்பவமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில் இந்த வடக்கிழக்கு பருவமழை காலத்தின் 3ஆவது சீசன் இது. வெளிப்புற மேகங்கள் கடற்லோர மாவட்டங்களுக்கு மிக அருகே உள்ளன. இது டிரெய்லர்தான்.
இதனால் சென்னை உள்பட வட தமிழகத்தின் மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை (நவ 18) மாலை அல்லது நாளை இரவு வரை மிக கனமழை பெய்யும்.

நவம்பர் 11
நவம்பர் 7, நவம்பர் 11 ஆகிய தேதிகளை போல நவம்பர் 18 ஆம் தேதியும் சென்னைக்கு குறைந்த காற்றழுத்தத்தால் காற்று குவிதல் ஏற்பட்டு கனமழை பெய்யும். இப்போது அவ்வப்போது அதிக மழை மேக வெடிப்பு போல் பெய்வது எல்லாம் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் இன்று இரவும் நாளையும் தான் இருக்கிறது.

காஞ்சிபுரம்
சென்னை, திருவளளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையின் சில பகுதிகள், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யும். அதாவது கடலோரத்தை சுற்றிய 100 முதல் 200 கி.மீ. தூரம் உள்ள பகுதிகளுக்கும் மழை பெய்யும். கடந்த இரு முறை நடந்த சம்பவங்களில் சென்னையின் தெற்கு பகுதிக்கு போதிய மழை கிடைக்கவில்லை.

மழை கொடுக்கும்
ஆனால் இந்த முறை அதெல்லாம் மிஸ்ஸாகாமல் நல்ல மழையை கொடுக்கும். எனவே வடசென்னையில் பெய்யும் நல்ல மழை மேற்கு பகுதியில் சென்னை முதல் வேலூர் வரையும் தெற்கு பகுதியில் சென்னை முதல் கடலூர் வரையும் பெய்யும் என தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 7ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை நுங்கம்பாக்கத்தில் பெய்தது.

3ஆவது மழை
இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மிக அதிக கனமழையால் வெள்ளக்காடானது. அது போல் வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த நவம்பர் 11 ஆம் தேதியும் சென்னையில் மிக கனமழை பெய்தது. சென்னை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னையில் இரு சம்பவங்கள் நடந்த நிலையில் மூன்றாவதாக ஒரு சம்பவம் நடக்கும் என வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications