தமிழகத்தில் 2 நாட்களுக்கு 2 மணி நேரம் சத்தியாகிரகப் போராட்டம்... தமிழக காங்கிரஸ் கமிட்டி அறைகூவல்.!
சென்னை: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கோரி தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணி நேரம் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மாலை 4 மணி முதல் 6 மணி வரை அம்பேத்கர் மற்றும் காந்தி சிலைகள் முன்பு அமர்ந்து அறவழிப் போராட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

19 வயது இளம்பெண்
உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை உ.பி. காவல்துறையினர் வழியிலேயே இடைமறித்து, காட்டுமிரண்டித்தனமாக அவர்களை கையாண்டதோடு மட்டுமல்லாமல், ராகுல் காந்தியை தாக்கி, அவரை கீழே தள்ளிய சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அறவழிப் போராட்டம்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தூண்டுதலின் பேரில் செயல்பட்ட உ.பி. காவல்துறையினரின் செயல்பாடு ஜனநாயக விரோதமும், சட்ட விரோதமும், அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அப்பெண்ணிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் நீதி வேண்டியும், ராகுல்காந்தி அவர்களை தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டிக்கும் வகையிலும் அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் போதித்த சத்தியாகிரக அறவழியில் அமர்ந்து போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.

அறவழிப் போராட்டம்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தூண்டுதலின் பேரில் செயல்பட்ட உ.பி. காவல்துறையினரின் செயல்பாடு ஜனநாயக விரோதமும், சட்ட விரோதமும், அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அப்பெண்ணிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் நீதி வேண்டியும், ராகுல்காந்தி அவர்களை தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டிக்கும் வகையிலும் அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் போதித்த சத்தியாகிரக அறவழியில் அமர்ந்து போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.

2 மணி நேரம்
இந்த சத்தியாகிரக அறவழி அமர்வு வருகிற அக்டோபர் 5 அல்லது 6 ஆம் தேதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாவட்டம் மற்றும் நகராட்சிகளில் அமைந்துள்ள காந்தி சிலை, அம்பேத்கர் சிலை அல்லது முக்கிய மையப்பகுதிகளில் சத்தியாகிரக அறவழியில் அமர்ந்து நம்முடைய எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

பழைய வரலாறு
உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்திற்கு பாஜக அரசு விதித்த பல தடைகளை தகர்த்து ராகுலும், பிரியங்காவும் பயணம் செய்த காட்சிகள் ஜனதா ஆட்சியில் 1977 ஆம் ஆண்டில் பீகார் மாநிலம் பெல்ச்சியில் 11 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் கூற பல தடைகளை கடந்து அன்று இந்திரா காந்தி யானை மீது அமர்ந்து பயணம் செய்தது நினைவுபடுத்துகிறது.

ஓயமாட்டோம்
எனவே, பாலியல் பலாத்காரத்திற்கு பலியான அப்பாவி பெண்ணிற்கு நீதி கேட்கிற போராட்டம் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படி மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் பாஜக ஒரு தலித் விரோத கட்சி என்பதை நாட்டுமக்களுக்கு உணர்த்துவோம், பாதிக்கப்பட்டு தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்!












Click it and Unblock the Notifications