மின்சார வாரியம் ஷாக்! லட்சம் தந்தும் இருளில் டெல்டா விவசாயிகள்! 6 மாதம் தட்கல் திட்டத்தில் என்னாச்சு
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட தட்கல் விவசாய மின் இணைப்பு 2026 திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியும், கடந்த 6 மாதங்களாக மின் இணைப்பு கிடைக்காமல் தமிழக விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக திருச்சி விவசாய மின் இணைப்பு பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்த அடுக்கடுக்கான புகார்களுக்கு மின்சார வாரியம் தற்போது கொடுத்துள்ள விளக்கம் என்ன என்பதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நடப்பு 2025-2026 ஆம் ஆண்டிற்கான விரைவு தட்கல் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 10,000 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2025 டிசம்பர் 15 அன்று வெளியானது.

தமிழ்நாடு மின்சார வாரியம்
முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மின்சாரம் பெறலாம் என்ற நம்பிக்கையில், இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர்.
இந்த திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விவசாயிகள், தங்களின் மோட்டார்களின் குதிரைத்திறன் (HP) அடிப்படையில் பெரும் தொகையை மின்வாரியத்தில் செலுத்தினார்கள்..
திருச்சி விவசாயிகள்
அதன்படி 5 குதிரைத்திறன் வரை உள்ள மோட்டார்களுக்கு 2.50 லட்சம் ரூபாயும், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை 2.75 லட்சம் ரூபாயும், 7.5 முதல் 10 குதிரைத்திறன் வரை 3 லட்சம் ரூபாயும், 10 முதல் 15 குதிரைத்திறன் கொண்ட பெரிய மோட்டார்களுக்கு அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரையிலும் விவசாயிகள் ஒருசேர முழுப் பணத்தையும் மின்வாரிய அலுவலகங்களில் கட்டி உள்ளனர்.
விவசாயிகள் உடனடியாக மின் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியும், தங்களின் நகைகளை அடகு வைத்தும் இந்த தொகையை திரட்டி அரசுக்கு செலுத்தி உள்ளார்கள்.. ஆனாலும் பணம் செலுத்தி 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பல விவசாயிகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் திருச்சி மாவட்ட விவசாயிகள் இந்த தாமதத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாமல் அடிக்கடி பாசனத்திற்குத் தடை ஏற்படுவதால், இந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பம்புசெட் மூலம் விவசாயம் செய்யத் திட்டமிட்டனர்.
பல லட்சம் கட்டியும் மின் இணைப்பு இல்லை
இதற்காக பல லட்ச ரூபாய் கூடுதலாகச் செலவு செய்து தங்களின் விளைநிலங்களில் போர்வெல் அமைத்திருக்கிறார்கள்.. தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு உடனே கிடைக்கும் என்று வட்டிக்குக் கடன் வாங்கி அரசுக்குக் கட்டிய பணமும் முடங்கி, தங்களது பயிர்களும் கருகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் கண்ணீருடன் சொல்கிறார்கள்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, தட்கல் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 367 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதில் இதுவரை 83 விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 284 விவசாயிகளுக்கும் மின் கம்பங்கள் அமைத்தல் மற்றும் தளவாடப் பொருட்கள் பற்றாக்குறை போன்ற பணிகளைச் சரிசெய்து, மிக விரைவில் மின் இணைப்பு வழங்க உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மின்சார வாரியம் பதில் என்ன
அதிகாரிகளின் நம்பிக்கை வரிகள் விவசாயிகளுக்கு ஆறுதலை தந்தாலும், தட்கல் என்ற பெயரே உடனடித் தேவைக்கானது என்றிருக்கும்போது, பல லட்சம் ரூபாயை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு 6 மாதங்களாக மின்சார வாரியம் காலம் கடத்துவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டே போவதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவிதமான இழுபறியுமின்றி போர்க்கால அடிப்படையில் உடனடியாக மின் இணைப்புகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாக உருவெடுத்துள்ளது...!!
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications