தமிழ்நாடு விடுதலைப் படை தலைவர் தமிழரசனின் தாயார் மறைவு: வேல்முருகன், திருமாவளவன் இரங்கல்
சென்னை: தமிழ்நாடு விடுதலைப் படை தலைவரான தமிழரசனின் தாயார் பதூசு அம்மையார் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1980களில் தனித் தமிழ்நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விடுதலைப் படையை உருவாக்கியவர் தமிழரசன். 1987-ல் பொன்பரப்பி வங்கி கொள்ளை சம்பவத்தின் போது தமிழரசன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

தமிழரசனின் தாயார் பதூசு அம்மையாரின் நூற்றாண்டு விழா சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இயக்கங்களால் கொண்டாடப்பட்டது. 100 வயதை கடந்த பதூசு அம்மையார் முதுமையால் சனிக்கிழமை மாலை காலமானார்.
தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவரும், தமிழ் தேசியப் போராளியுமான தோழர் திரு.தமிழரசன்.அவர்களின் தாயார் பாதூசா அம்மாள் அவர்கள் இன்று மாலை மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
— Velmurugan.T (@VelmuruganTVK) October 31, 2020
அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம். pic.twitter.com/iM5s5YYNwA
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவரும், தமிழ் தேசியப் போராளியுமான தோழர் தமிழரசன். தாயார் பாதூசா அம்மாள் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம் என கூறியுள்ளார்.
தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் #அன்னை_பதூசியம்மாள் மறைவு கவலையளிக்கிறது.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 31, 2020
மதகளிர்மாணிக்கம் கிராமத்துக்குப் போய் அவரைச் சந்தித்த நினைவுகள் பெருமைக்குரியவை.
சாதிஒழிப்பை முன்னிறுத்திய தமிழ்த்தேசியப் போராளியை ஈன்ற பெருமைக்குரிய தாய்க்கு எமது #வீரவணக்கம்.#தமிழ்நாடு_விடுதலைப்_படை pic.twitter.com/8vEA6YyfhO
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமது ட்விட்டர் பதிவில், தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் அன்னை பதூசியம்மாள் மறைவு கவலையளிக்கிறது. மதகளிர்மாணிக்கம் கிராமத்துக்குப் போய் அவரைச் சந்தித்த நினைவுகள் பெருமைக்குரியவை. சாதிஒழிப்பை முன்னிறுத்திய தமிழ்த்தேசியப் போராளியை ஈன்ற பெருமைக்குரிய தாய்க்கு எமது வீரவணக்கம் என தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications