நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு.. தேர்வறைக்கு எத்தனை மணிக்கு செல்ல வேண்டும்! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள்) நாளை , நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பும் பணியை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தான் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்முக தேர்வு பதவிகள்) - II அறிவிப்பு என்பது கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த தேர்வின் மூலம் தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் கழகம், மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தில் மேலாளர், துணை மேலாளர், தமிழ்நாடு சட்ட மற்றும் உயர்கல்வித்துறை கல்லூரிகளில் உள்ள லைப்ரேரியன், தமிழக சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் அக்கவுண்ட் ஆபிசர் உள்பட மொத்தம் 105 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்நிலையில் தான் நாளை (நவம்பர் 18 ), நாளை மறுநாள் (நவம்பர் 19) என 2 நாட்கள் இந்த பணிகளுக்கான தேர்வு என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்வு என்பது மொத்தம் 2 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்வர்கள் வர வேண்டிய நேரம் குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(நேர்முக தேர்வு பதவிகள்) 18.11.2024, 19.11.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் காலை, மதியம் என்று மொத்தம் 2 அமர்வுகளால் நடைபெற உள்ளது. இதனால் தேர்வர்கள் காலையில் 8.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்குள் வர வேண்டும்.
அதோடு சலுகை நேரமாக காலை 9 மணி வரையும், மதியம் 2 மணி வரையும் வழங்கப்படம். அதன்பிறகு காலை 9.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் தேர்வுகள் தொடங்கும். அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட் சலுகை நேரத்திற்கு பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
-
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications