டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் - ஏப்.28 கடைசி நாள்

குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு இதுநாள் வரையில் 13 லட்சம் பேர் இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு இதுநாள் வரையில் 13 லட்சம் பேர் இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதாவது, சராசரியாக 1 பணிக்கு 18 நபர்கள் விண்ணப்பித்துள்ளனராம்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வெளியிட்டார். அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் வீட்டு வசதி வாரியங்கள் உள்ள 163 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது என்பது பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவில் மூலம் நிரப்பப்படும் என்றும், இத்தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மூன்று மணி நேரம் நடைபெறும் என்றும் அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 தேர்வுகள் 7307 காலி பணியிடங்கள்

குரூப் 4 தேர்வுகள் 7307 காலி பணியிடங்கள்

தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஆன்லைனின் விண்ணப்பம்

ஆன்லைனின் விண்ணப்பம்

இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

கலந்தாய்வு

கலந்தாய்வு

ஒவ்வொரு வகுப்புப் பிரிவுகளிலும் (ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், பொதுப் பிரிவினர்) நியமனம் செய்யப்படவுள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விண்ணப்பித்தவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, எழுத்துத் தேர்வில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

200 கேள்விகள்

200 கேள்விகள்

இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாகவும் , 75 கேள்விகள் பொது அறிவு தொடர்பானதாகவும் இருக்கும். குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

விண்ணப்பிக்க கடைசி நாள்

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/ www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை மொத்தம் 13 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் 28ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி இணைய தளம்

டிஎன்பிஎஸ்சி இணைய தளம்

https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகள் அல்லது 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+