TNPSC Results.. குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போது.. வெளியான அடிதூள் அறிவிப்பு.!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அரசு வேலை மீது எப்போதும் தனி ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. பணி உத்தரவாதம் உள்ளிட்ட காரணங்களால் இப்போதும் நம்ம ஊர் இளைஞர்கள் அரசு வேலைக்கே ரெடியாகிறார்கள்.

மத்திய அரசின் வேலைகளுக்கும் சரி மாநில அரசின் வேலைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் முயல்கிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் தேர்வு எழுதுபவர்களைப் பார்த்தாலே இது நமக்குப் புரியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தான் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற க்ரூப் 4 தேர்வு முடிவுகள் பல மாதங்கள் வெளியாகாமலேயே இருந்தது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தச் சூழலில் க்ரூப் 1 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவலைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் துணை ஆட்சியர், போலீஸ் எஸ்பி, உதவி ஆணையர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்பத் தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 1,90,957 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், தேர்வர்களுக்குக் கவலை ஏற்பட்டது.
இந்தச் சூழலில் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் (ஏப்ரல்) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 5446 பணியிடங்களை நிரப்பக் கடந்த பிப். மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அது வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்து சமய அறநிலையத்துறையில் கிரேடு 3 மற்றும் கிரேடு 4 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications