தமிழகத்தில் 1,071 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு..!
தமிழகத்தில் தொற்றுக்கு இன்று மேலும் 1,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,071 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 8,07,962 ஆக உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தபடியே வருகிறது.. அதற்கேற்றார்போல் சுகாதாரத்துறையின் தீவிரமான நடவடிக்கைகளால், டிஸ்சார்ஜ்களும் அதிகரித்து காணப்படுகிறது.

இதையொட்டி, தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்று மேலும் தமிழகத்தில் 1,071 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 8,07,962 ஆக உயர்ந்துள்ளது... ஒன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்... அதேபோல, சென்னையில் மேலும் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,495 ஆக உயர்ந்துள்ளது... அதேபோல கொரோனாவிலிருந்து இதுவரை 7,86,472 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர். இன்று மட்டும் 1,157 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 1,35,23,032 பேருக்கு கொரோனா டெஸ்ட்டுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 63,016 மாதிரிகள் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன.. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 235 மையங்களில் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications