லாஸ்ட் சான்ஸ்.. ரூ.2000 நோட்டுக்களை மாற்ற இன்றே கடைசி நாள் - மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: ரூ.2000 நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதனை மாற்றுவதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடைகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ஆம் அண்டு நவம்பர் 8 ஆம் தேதி தொலைக்காட்சிகளில் தோன்றி புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார். நாடு முழுவதும் இந்த அறிவிப்பால் அடுத்த சில மாதங்கள் மக்கள் கடுமையாக நெருக்கடிக்கு ஆளாகினர். அப்போது ரிசர்வ் வங்கி பிங்க் நிற 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது. அதனை மாற்ற வங்கிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசைகளில் நின்றனர்.

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கடந்த ஓராண்டாகவே வங்கிகள், வணிக நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் குறைந்தது. ஏடிஎம்களிலும் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. இதனை வைத்து 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி தடை செய்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவி வந்தன. இந்த கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அறிவிப்புதான் அது. அப்போதே அதன் சுழற்சியையும் ரிசர்வ் வங்கி நிறுத்தியது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரூ.2000 நோட்டுக்கள் செல்லாமல் போயின. அதற்கு சில நாட்கள் முன்பாகவே வங்கிகளில் ஏராளமான பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றினர். ஆனால், பலரால் அந்த பணத்தை மாற்ற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு வந்த நிலையில், ரிசர்வ் வங்கி அக்டோபர் 7 ஆம் தேதியான இன்று வரை அதை வங்கிகளில் மாற்றுவதற்கு அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் இன்று முடியும் நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான 96 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டு உள்ளன. ரூ.12,000 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் வரவில்லை. ரிசா்வ் வங்கி புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை மக்கள் வங்கிக் கணக்கில் செலுத்தவோ அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றவும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு, அக்டோபர் 7 ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டது." என்றார்.
-
மீண்டும் உயிர் பெறும் "இந்தியா.." மம்தா எடுக்கும் முயற்சி.. விஜய் உள்ளே.. ஸ்டாலின் வெளியே! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications