சொத்து வரி செலுத்திட்டீங்களா? சென்னை மாநகராட்சிக்கு இன்றுதான் கடைசி நாள்! இல்லன்னா பெனாலிட்டி!
சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாளாகும். ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்கான அரையாண்டு கட்டணம் செலுத்த வேண்டும். சொத்து வரியானது ஆண்டுக்கு இரு முறை வீதம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி இரு அரையாண்டுகள் வீதம் வசூலிக்கப்படும். சொத்து வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலும் இரு முறை வசூலிக்கப்படுகிறது.

முதல் அரையாண்டுக்குள் வரி செலுத்திவிட வேண்டும். அதை சேர்த்துவைத்து இரண்டாம் அரையாண்டுக்கு செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும். சொத்து வரி ஆண்டுக்கு சென்னை மாநகராட்சியில் 895 கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. முதல் அரையாண்டில் செப்டம்பர் 28ஆம் தேதி வரை 375 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்டவர்கள் சொத்து வரி செலுத்த இன்றைய தினம் கடைசி தேதியாகும். சென்னை குடிநீர் வாரியத்தில் 13,96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்தி வருகிறார்கள். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13.74 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து 2024-2025 ஆம் நிதியாண்டில் 2000 கோடி ரூபாய் வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications