விடுபட்ட வீடுகள்.. இன்றே கையில் கிடைத்துவிடும் பூத் சிலிப்கள்.. தமிழகம் முழுதும் விறுவிறு தேர்தல் பணி
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கிவந்துவிட்ட நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகள் இன்றைக்குள் முடிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்கள் ஓட்டளிக்க வசதியாக, தேர்தல் கமிஷன் சார்பில், அனைத்து வாக்காளர்களுக்கும், 'பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது. இதில், வாக்காளர் பெயர், வயது, முகவரி, அவர் ஓட்டளிக்கும் ஓட்டுச்சாவடி அமைவிடம், வாக்காளர் பட்டியலில் வரிசை எண் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஓட்டுச்சாவடி: இவற்றை ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லும்போது, அதில் உள்ள வரிசை எண்ணை வைத்து, அங்குள்ளவர்கள் வாக்காளரை எளிதில் அடையாளம் காண முடியும். ஆனால், பூத் சிலிப்பை அடையாள சான்றாக காண்பிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை அடையாள சான்றுக்கு காண்பிக்க வேண்டும்.
அந்தவகையில், வாக்காளர் தகவல் சீட்டு எனப்படும் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு 13ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்..
குளறுபடிகள்: அதுவும் இல்லாமல், இந்த முறை பூத் சிலிப் வழங்கும் பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது.. காரணம், இதில், குளறுபடிகள்இருப்பதால், அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்கக்கூடாது என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த முறை தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் தொடங்கியது.. வாக்காளர் வழிகாட்டி கையேடும் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது..
ஓட்டுச்சாவடி: நேற்று முன்தினம் நிலவரப்படி, 92.82 சதவீதம் பேருக்கு பூத் சிலிப்கள் வழங்கப்பட்டிருந்தன. சில வீடுகளுக்கு சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை என ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். அதனால், விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் சிலிப் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பூத் சிலிப் கிடைக்காதவர்கள், 'Voter Helpline' எனும் மொபைல் போன் செயலி மற்றும் தேர்தல் கமிஷன் வெப்சைட்டில், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது தங்கள் பெயர் மற்றும் விபரங்களை குறிப்பிட்டு, பூத் சிலிப் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுளள்து.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications