Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைவிளக்கு ஏந்திய காரிகை! ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்‌ நினைவு நாள்! நோயாளிகளிடம் நேசம் காட்டிய செவிலியர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அருவருப்பான சூழல்களில் கூட நோயாளிகளிடம் சிறிதும் முகம் கோணாமல் செவிலியர் பணியை செய்தவர் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்‌.

செவிலியர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து மறைந்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படும் நிலையில் அவர் குறித்த ஒரு சிறிய பதிவை வெளியிட்டுள்ளார் திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ். அதன் விவரம் வருமாறு;

Today is the memorial day of the late Florence Nightingale, a role model for nurses

''இந்த மண்ணில் நாள்தோறும் ஆயிரம் ஆயிரம் உயிர்கள் பிறப்பதும், இறப்பதும் இயல்புதான். சிலரது இறப்புகள் இதயங்களை வலிக்கச் செய்யும். அப்படிப்பட்டவர்களின் நினைவுகள் இதயம் முழுவதும் நிரம்பி வழியும். இந்த மண்ணை விட்டு மறைந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பலரது நெஞ்சங்களின் நினைவலைகளில் ஒளி விளக்காய் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருப்பவர் தான் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்‌.

ஈடு இணையற்ற தனது செவிலியர் சேவையால் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்த நைட்டிங் கேலின் நினைவு தினம் இன்று. போர்க்களச் சூழலில் பணியாற்றிய தனது பெருமைமிக்க சேவையால் கைவிளக்கு ஏந்திய காரிகை என்ற சிறப்பையும் பெற்றவர்.

இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் கடந்த 1820 இல் ஒரு ஆங்கிலேயர் குடும்பத்தில் பிறந்தார் ஃப்ளோரன்ஸ். அதன் பிறகு இங்கிலாந்து திரும்பியதும் செல்வ செழிப்பான குடும்பத்தில் வளர்ந்த அவருக்கு தந்தையின் வழிகாட்டுதல் பல துறைகளில் நிபுணத்துவம் பெற உதவியது. வரலாறு, அரசியல், இலக்கியம், தத்துவம், கணிதம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார். மேலும் இளம் வயதிலேயே பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், கிரேக்கம் போன்ற பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். சிறந்த எழுத்தாளர், புள்ளியியளாளர் போன்ற சிறப்புகளையும் கொண்டிருந்தார் ஃப்ளோளாரன்ஸ். ஆனாலும் தனது திறமையில் அவருக்கு அவ்வளவாக திருப்தி கிடைக்கவில்லை.

அதே நேரம் மத நம்பிக்கை அவரது வாழ்வியலுக்கான அர்த்தத்தை கொடுத்தது. தனது 16 வது வயதிலேயே மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்களை கண்டு வேதனையுற்ற அவர், அவற்றை தீர்க்க வழி என்ன என்பது பற்றி சிந்திக்க தொடங்கினார். கடவுள் விடுத்த அழைப்பு என எண்ணி மனித குலத்திற்கும் கடவுளுக்கும் சேவை செய்ய செவிலியர் பணியே பொருத்தமான வழி என்று முடிவு செய்தார். ஆனால் அதற்கு குடும்பத்தினரிடமிருந்து அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

தனக்கான திருமண ஏற்பாட்டையும் நிராகரித்த அவர், தனது சொந்த முயற்சியால் ஜெர்மனி சென்று அங்குள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் செவிலியர் சேவைக்கான அடிப்படை மருத்துவ திறன்களை கற்றுத் தேர்ந்தார். பின்னர் 1850 களின் தொடக்கத்தில் தனது தாயகமான இங்கிலாந்து திரும்பிய அவர், லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்தார்.

அந்த வேலை அவருக்கு மிகப்பெரிய மனநிறைவை அளித்தது. அங்கு சுகாதாரமற்ற சூழலில் காலரா பரவிய நேரம் அது. ஆனால் சற்றும் அஞ்சாத நைட்டிங்கேல் அதை சவாலாக ஏற்று அங்கிருந்த ஆரோக்கியமற்ற சூழலையே மாற்றி காட்டினார். உயிர் இழப்புகளை குறைக்க உதவினார். அதே நேரம் அந்த தேவதைக்கு இதனால் உடல் நலம் குன்றியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் குணமடைந்தார்.

இந்த போராட்டம் முடிந்ததும் ரஷ்யாவுக்கு எதிரான போரால் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் ரஷ்யாவின் கருங்கடல் பிரதேசத்திற்கு சண்டைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பலரும் கொடுங்காயங்களுடன் ராணுவ மருத்து முகாம்களில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு நிலைமை மோசமானதால் வீரர்களுக்கு சேவையாற்ற நைட்டிங்கேலுக்கு அழைப்பு வந்தது. தன்னுடன் ஒரு செவிலியர் குழுவை அழைத்துக் கொண்டு அவர் அப்பகுதிக்கு விரைந்தார்.

அப்போது அங்கு இருந்த நிலைமையை வேறு யாராவது பார்த்து இருந்தால் வந்த வழியே திரும்பி ஓடி இருப்பார்கள். ஒரு பெரிய கழிவு நீர் தொட்டி மீதுதான் மருத்துவ முகாம் இருந்தது. தாங்கள் வெளியேற்றிய மலம் என்று கூட தெரியாமல் வலியாலும், அதன் வேதனையாலும் அதன் மீதே வீரர்கள் பலர் நோயாளிகளாக படுத்துக்கிடந்தனர். அவர்களில் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

வழிந்து ஓடும் கழிவு நீர், பார்க்கும் இடமெல்லாம் நெளியும் புழு, பூச்சிகள், குடலைப் புரட்டிய துர்நாற்றம் போன்ற படுமோசமான சூழலுக்கு மத்தியில் டைபாய்டு, காலரா நோய்களும் படுவேகத்தில் பரவின. இறப்பும் அதிகமாக இருந்தது. எனினும் தனது ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் ஓடி ஓடி சேவை ஆற்றினார் ஃப்ளோரன்ஸ். இருக்கும் மருந்துகளை கொண்டு ஒவ்வொரு நோயாளிகளிடமும் ஓடோடி சென்று சேவை புரிந்தார். இரவில் கண் உறங்க மனமின்றி கையில் கைவிளக்கை ஏந்திய படி ஒவ்வொரு நோயாளி அருகிலும் சென்று உடல் நிலையை கண்காணித்தார்.

அவரது சேவையால் மனம் உருகிய வீரர்கள் பலரும் நைட்டிங்கேலை தங்கள் தாயாக மதித்துப் போற்றினர். கைவிளக்கு ஏந்திய காரிகை என அழைத்து மகிழ்ந்தனர். கிரிமியாவின்(போர் நடந்த இடம் என்பதால்) தேவதை என்றும் வருணித்தனர். ''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+