இந்த மாவட்டங்களில் எல்லாம் இடி மின்னலோடு மழை வெளுக்கப் போகுது - எச்சரிக்கும் வானிலை
தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வருவதாலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று
சென்னை: தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப்பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்குச்சுழற்றி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பகலில் வெயிலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இரவு நேரங்களில் திடீரென மழை கொட்டித்தீர்க்கிறது.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டிணம்,புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரையில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யும். அதிக பட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டம் காரையாரில் அதிகபட்சமாக 13 செமீ மழை பதிவாகியுள்ளது. ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சியில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி, கரூர், மதுரையில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது.
-
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications