வறண்ட வானிலை..வெப்பம் அதிகரிக்கும் வெளியே வர வேண்டாம்..வானிலை ஆய்வு மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் இரு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20, 21, 22 ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசி வருகிறது. பல ஊர்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டி பதிவாகி உள்ளது. ஈரோடு நகரத்தில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்,ஈரோடு,மதுரை மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் பதிவாகியுள்ளது. சென்னை, கோவை, தருமபுரி,கன்னியாகுமரி, சேலம்,திருப்பத்தூர்,திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பு விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் பதிவாகியுள்ளது.
இன்றும் நாளையும் தமிழ்நாடு,புதுச்சேரி காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும் இதன் காரணமாக ஏப்ரல் 20 முதல் 23 வரை தென் தமிழகம், வட தமிழகம், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும். குறைந்த பட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications