ஆடிப் பெருக்கு 2023: இன்று பத்திரப்பதிவு செய்கிறீர்களா.. சூப்பர் ஆஃபரை நேற்றே வழங்கியது தமிழக அரசு
சென்னை: இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நேற்றே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினமும் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆடிபெருக்கு தினம் கொங்கு பகுதியில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை ஆடி நோம்பு என்றும் அழைக்கிறார்கள். ஆடி மாதத்தில் 18ஆவது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கொண்டு இந்த விழா நடத்தப்படுகிறது.
தங்கு தடையின்றி விளைச்சல் நடைபெற வேண்டும் என ஆற்றங்கரைகளில் பூஜைகள் செய்வர். காவிரி கரைகளில் வாழை மட்டையில் விளக்கு ஏற்றி அனுப்புவர்,. காவிரியாற்றை சுற்றி இருக்கும் இடங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக தாலி கயிற்றை மாற்றிக் கொள்வர். இந்த நாளில் முதல் முதலில் நல்ல காரியங்களை மக்கள் செய்வர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் முக்கிய அறிவிப்பு வெளியானது.
அதன்படி இன்று ஆடிப்பெருக்கையொட்டி அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக நேற்றைய தினமே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு இன்று கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்களை பெற்றோர் இன்றைய தினம் வந்து பத்திரப்பதிவை செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பத்திரப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது போல் கையில் லட்சகணக்கில் பணத்தை வைத்திருக்கவும் அவசியம் இல்லை.
டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்தால் போதும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரங்கள் அனைத்தையும் வெப்சைட்டில் பதிவு செய்திட வேண்டும். இதன் பிறகு பத்திரங்கள் சரி பார்க்கப்பட்டு பத்திரப்பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படும். இந்த டோக்கன்கள் தினமும் 100 முதல் 200 வரையும் பெரிய சார்பதிவாளர் அலுவலகங்களில் 300 முதல் 400 வரையும் டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
இதற்கு பிறகுதான் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அசல் பத்திரங்களுடன் வந்து பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதால் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் நேரங்களில் மட்டுமே கட்டாயம் வர வேண்டும். அந்த நேரத்தில் வராவிட்டால் டோக்கன்கள் ரத்து செய்யப்படும். இதனால் டோக்கன் முறையை ரத்து செய்யப்பட கோரிக்கை எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications