Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தக்காளி விலை கிலோ உச்சத்தில் ரூ.100 ஆக உயர்வு.. பண்ணை பசுமை கடைகளில் ரூ.68ஆக விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். டியூசிஎஸ் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு கோடையில் கடும் வெயில் வாட்டியது. வழக்கமாக கோடைக் காலத்தில், பாசன நீர் பற்றாக்குறை, கடும் வெயிலில் செடிகள் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் தக்காளி உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை உயரும்.

Tomato Price Hike: TN Government to Sell Tomatoes at Lower Price on Pannai Pasumai Kadai

இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2வது வாரம் வரை தக்காளி விலை குறைவாக இருந்தது. அதன் பிறகு விலை ஏற்றம் அடைந்து கோயம்பேடு சந்தையில் நேற்று முதல் தர தக்காளி, மொத்த விலையில் கிலோ ரூ.70க்கு விற்கப்பட்டது. இது சில்லறை விற்பனை சந்தைகளில் தரத்துக்கு ஏற்றவாறு கிலோ ரூ.40 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. இதன் காரணமாக ஓட்டல்களில் தக்காளி காரச்சட்னி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இல்லத்தரசிகளும் சமையலுக்காக தக்காளி வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் முதல் தர தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையும், இதற்கு அடுத்த ரகம் கிலோவுக்கு ரூ.85 வரையும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம் என்று செய்தியாளர்களிடம் பேசிய கோயம்பேடு மலர், காய், கனி மொத்த வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன், கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாகத் தினமும் 800 டன் தக்காளி வரும். ஆனால் நேற்று 350 டன் மட்டுமே வந்தது. அண்மையில் தக்காளி விலை குறைந்ததால், விவசாயிகள் தக்காளி பயிரிடுவதைக் கடந்த 2 மாதங்களாகத் தவிர்த்துவிட்டனர். சிலர் மட்டுமே பயிரிட்டுள்ளனர்.

தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளிலும் விளைச்சல் குறைந்துள்ளது. அங்கு தக்காளி வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், விலை உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்று விற்பனையாளர்கள் கூறினார்.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பீன்ஸ் கிலோ ரூ.70, கேரட் ரூ.45, சாம்பார் வெங்காயம் ரூ.40, பாகற்காய் ரூ.30, பீட்ரூட், நூக்கல் தலா ரூ.25, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.16, வெங்காயம் ரூ.11, முருங்கைக்காய் ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.8 என விற்கப்பட்டது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 68 பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும். தேவையின் அடிப்படையில் நியாய விலை கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+