சரியும் தக்காளி விலை.. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை இதுதான்.. இல்லதரசிகள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியல் வெளியாகி உள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகள் வருகின்றன.

Koyambedu tomato vegetables

இந்த காய்கறி வரத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பொருட்களின் விலை எகிறும். அந்த வகையில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து கடந்த 2 நாட்களால் தக்காளி வரத்து சரிந்தது.

இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்பனையானது. ஆனால் தற்போது தக்காளி வரத்து ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வர தொடங்கி உள்ளது. இதனால் தக்காளி விலை குறைய தொடங்கி உள்ளது. அதன்படி இனு்று கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.24க்கும், மிளகாய் ஒரு கிலோ ரூ.30க்கும், மாங்காய் ஒரு கிலோ ரூ.15க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.70க்கும் விற்பனையாகிறது.

காரட்டை எடுத்து கொண்டால் கிலோ ரூ.70க்கும், பீன்ஸ் கிலோ ரூ.90க்கும், பட்டாணி கிலோ ரூ.180க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.40க்கும், தேங்காய் கிலோ ரூ.65க்கும், கடைமிளகாய் ரூ.60க்கும், பூண்டு கிலா ரூ.150க்கும், முள்ளங்கி ரூ.20க்கும், புடலை கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+