பெட்ரோலுக்கே செம டஃப் கொடுக்கும் தக்காளி! சென்னை கோயம்பேட்டிலேயே இந்த விலையா? அப்போ மற்ற இடங்களில்?
சென்னை: கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ.100ஐ எட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று ரூ.60-80 வரை விலை குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் கிலோ ரூ.120ஐ எட்டியிருக்கிறது.
சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கோயம்பேடு சந்தை இருக்கிறது. இந்த சந்தைக்கு தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். ஆனால் பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும். ஆனால் இன்று இதில் 60 சதவிகித (400 டன்) லாரிகளில்தான் லோடு வந்து இறங்கி இருக்கிறது.

ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவேண்டிய தக்காளி வராததால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக கிலோ ரூ.120க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு பெட்டி ரூ.1000 - ரூ.1,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடுமையான வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் வரும் வாரங்களில் இரண்டு முகூர்த்த தினங்கள் இருப்பதால் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர். கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையிலேயே கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது எனில், சில்லறை கடைகளில் விலை ரூ.150ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விலையேற்றத்தின் காரணமாக மக்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறுகையில், "சில நேரங்களில் வரத்து அதிகமாக இருந்தால் விலை குறைந்துவிடுகிறது. அதே வரத்து குறைவாக இருப்பின் விலை அதிகரித்து விடுகிறது. எங்களுக்கு போதுமான அளவில் குளிர்சாதன கிடங்கு அமைத்து கொடுத்தால் அதிக வரத்து இருக்கும்போது அதை சேமித்து வைத்து வரத்து குறையும் போது இயல்பான விலையில் எங்களால் விற்பனை செய்ய முடியும். இதற்கு அரசு ஆதரவளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங், "ஆண்டின் 365 நாட்களிலும் தக்காளி விநியோகத்தை சீராக்குவதற்கான தீர்வைக் கண்டறிய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதை எப்படி பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மாணவர்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன. அடுத்த 15 நாட்களில் தக்காளி விலை குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்தில் விலை இயல்பை எட்டும் " என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications