வருது வருது.. நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி கிடைக்கும்.. யார் யாருக்கு தெரியுமா? தமிழக அரசு அதிரடி
சென்னை: நாளை முதல் ரேஷன் கடைகளிலேயே தக்காளி கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதுகுறித்த விவரங்களை அமைச்சர் பெரிய கருப்பன் விரிவாக விளக்கி உள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது... ரூ.70-க்கு விற்கப்பட்டு, ரூ.100-க்கி விற்பனையாகிறது. ஒரு சில இடங்களில் 170 ரூபாய்க்குகூட தக்காளி விற்கப்படுவதாக சொல்கிறார்கள்.

தக்காளி வரத்து: தக்காளி வரத்து குறைந்துள்ளதால்தான், தக்காளி விலை உயர்ந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.. மேலும், வரத்து குறைவு, கோடை மழை உள்ளிட்ட காரணங்கள் தக்காளி விலை உயர்வு என்று காரணம் தெரிவிக்கப்பட்டாலும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகிறார்கள். தக்காளி விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் பெரிய கருப்பன், ரேஷனில் தக்காளி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படியே இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சொன்னதாவது:
ரேஷன் கடைகள்: "அகில இந்திய அளவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. அதனால், அந்த விலையை கட்டுபடுத்த பண்ணைப் பசுமைக் கடைகளை போல ரேஷன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்படும். முதற்கட்டமாக சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னையில் 25 ரேஷன் கடைகள், தென்சென்னையில் 35 ரேஷன் கடைகள் மற்றும் மத்திய சென்னையில் 22 என பிரித்து சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் மொத்தமாக 111 கடைகளில் குறைந்தது 50 முதல் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும்.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நுகர்வோர்கள்: வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும், இந்த திட்டத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய அளவில் தக்காளியின் விலை மொத்தமாகவே உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தக்காளி விலை உயர்வு ஏற்படுகிறது.. இனி இது நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்... தக்காளி பதுக்கல் உள்ளிட்ட செயல்களில் வியாபாரிகள் யாரும் ஈடுபடவில்லை.. அதேசமயம், விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
வேளாண்துறை: கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து வந்து கொண்டிருந்தது.. நம்முடைய மாநிலத்திலேயே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 75% தக்காளிகள் பயிரிடப்படுகிறது.
25 சதவீதம் மற்ற மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. இது வேளாண்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள கணக்காகும்.. இந்த வருடம் விலை உயர்வை சமாளித்து அடுத்த வருடம் தொலைநோக்கு பார்வையோடு இதுபோன்ற நெருக்கடிகள் வராத அளவுக்கு அதற்கான வழிமுறைகள் காணப்பட்டிருக்கிறது" என்றார் அமைச்சர்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications