நாளை காலை இதே வேளை வள்ளுவர் மறை முகப்போவியம்! காத்திருப்பேன் உங்கள் கருத்துக்காக.. வைரமுத்து
சென்னை: திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள வைரமுத்து, அதற்கு, வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்று பெயர் வைத்துள்ளார். இந்த உரை வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், நாளை காலை இதே வேளை 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' முகப்போவியம் வெளியிடுகிறோம் என்று வைரமுத்து இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகப்பொதுமறைகளில் ஒன்றாக விளங்குவது திருக்குறள். இதில் உள்ள அறத்து பால், பொருட் பால், இன்பத்து பால் ஆகியவற்றிற்கு கவிப்பேரரசு வைரமுத்து உரை எழுதியுள்ளளார். வைரமுத்துவின் இந்த உரை வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த நூலின் பெயர் "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" என்பதாகும். இந்த திருக்குறளுக்கு வைரமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரை எழுத தொடங்கினார். 1330 குறள்களுக்கும் கடந்த மே மாதம் 22- ஆம் தேதியுடன் உரையை எழுதி முடித்துள்ளார்.
இந்த வள்ளுவர் மறை வைரமுத்து உரை வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், நாளை காலை இதே வேளை 'வள்ளுவர் மறைவைரமுத்து உரை' முகப்போவியம் வெளியிடுகிறோம் என்று வைரமுத்து இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
"நாளை காலை இதே வேளை 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' முகப்போவியம் வெளியிடுகிறோம். காதலிக்கு எழுதிய முதல் கடிதத்தின் மறுமடலுக்கு ஏங்கும் காதலன் போலக் காத்திருப்பேன் உங்கள் கருத்துக்காக! " என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கன்னியாகுமரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவில் உரையாற்றிய வைரமுத்து, திருக்குறளுக்கு உரை எழுதப் போவதாக கூறியிருந்தார். இந்த அறிவிப்பின் படி, திருக்குறளுக்கு உரை எழுதி முடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
திருக்குறளுக்கு இதுவரை பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், திரு.வி.கல்யாணசுந்தரனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேய பாவாணர், நாமக்கல் கவிஞர், மு.வரதராசனார், புலவர் குழந்தை, சி.இலக்குவனார், கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உரை எழுதியுள்ளனர். இந்த உரைகளில் இருந்து தனது உரை மாறுபட்டதாக இருக்கும் என்றும் வைரமுத்து கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications