நாளை சென்னை வருகிறேன்.. ஐஐடியில் பேசப் போகிறேன்.. நல்ல ஐடியா இருந்த சொல்லுங்க.. பிரதமர் மோடி
Recommended Video
சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னையில் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே சென்னை ஐஐடியில் உரையாற்றுவது குறித்து ஐடியா தருமாறு டுவிட்டரில் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா-சிங்கப்பூர் இணைந்து நடத்தும் ஹேக்கத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

9.15க்கு ஐஐடி செல்கிறார்
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.இதற்காக தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்லும் மோடி சென்னை ஐஐடி வளாகத்தில் காலை 9.15 மணிக்கு தரை இறங்குகிறார்.

பரிசு வழங்குகிறார் மோடி
பின்னர் ஐஐடி சென்னை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 9.30 மணிக்கு கலந்து கொள்கிறார். அப்போது ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார் பின்னர் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்காக அமைக்கப்படும் கண்காட்சியை பார்வையிடுகிறார்.
|
மோடி பங்கேற்கிறார்
அதன்பின்னர் 11.40 மணிக்கு சென்னை ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
|
ஐஐடி மாணவர்களுக்கு
இந்த விழாவில் பேசுவது குறித்து தான் பிரதமர் மோடி இன்று ஒரு டுவிட்டரில் பதிவினை வெளியிட்டுள்ளார். அந் பதிவில் சென்னை ஐஐடியில் நடைபெற உள்ள விழாவில் நான் பங்கேற்க உள்ளேன். அங்கு என்னுடை பேச்சுக்கள் எதை பற்றி இருக்க வேண்டும் என்பதை பொதுமக்கள் நமோ ஆப்பில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் குறிப்பாக ஐஐடி மற்றும் ஐஐஎம்மில் படிக்கும் மாணவர்கள் யோசனைகள் தெரிவிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications