இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 24/02/2026: விஜய் முதல் வானதி சீனிவாசன் வரை! தலைவர்களின் நச் பாயிண்ட்ஸ்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) இன்னும் இரு மாதங்களில் நடக்க இருக்கிறது. இதனால் தற்போது அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுகள், கருத்து மோதல்கள் என அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (24/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

முதல்வர் ஸ்டாலின்
கடந்த அதிமுக ஆட்சியில்.. பாஜக இவர்கள் மீது ரெய்டு மூலம் பிரஷர் போட்டது. கூட்டணிக்கு பின் அதில் நடவடிக்கை இல்லாமல் போய்விட்டது. பாஜகவிற்கு ஆமாம் சாமி போடும் பழனிசாமிகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல், வெறும் அரசியல் களம் மட்டுமல்ல.. அது மாநில சுயாட்சியையும் சமூக நீதியையும் காப்பதற்கான ஒரு நேரடி சித்தாந்தப் போர்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக 3 ஆம் கட்ட வாக்குறுதிகளாக, அதிமுக ஆட்சி அமைந்தால் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்வோம். மேலும் தைப்பொங்கல் அன்று பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.. ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரு.10 ஆயிரம் வழங்கப்படும்.
கைதத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும். விசைத்தறி நெசாவாளர்களுக்கு தற்போது இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
விஜய்
ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் அவர்களுடைய எதிரிகளைத்தான் எதிர்ப்பார்கள். ஆனால், இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக அனைவரும் சேர்ந்து என்னை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் விஜய், லஞ்சம், ஊழலை எதிர்க்கிறான், மக்களோடு மக்களாக நிற்கிறான்.
மக்கள் விஜய்யுடன் இருக்கிறார்கள். அந்த வெறுப்பில்தான் என்னை எதிர்க்கிறார்கள். வரும் தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர்.. எனக்கு அரசியல் தெரியவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று தான் அர்த்தம்.
ஓ பன்னீர் செல்வம்
நான் எந்த துரோகமும் செய்யவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் என்னை கட்டாயப்படுத்தி 3 வது முறையாக முதல்வர் ஆக்கினார்கள். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து ஆட்சி அமைத்தவர் தான் ஜெயலலிதா.. இதனால் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று சொன்னது தவறா? எடப்பாடி பதவி ஏற்றதற்கு பிறகு எந்த தேர்தலிலாவது வெற்றி பெற்று இருக்கிறாரா
ஆர் எஸ் பாரதி
எங்கள் தகுதிக்கு விஜய்க்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. விஜய்யின் முகத்திரை இன்னும் கொஞ்சம் நாளில் வெட்ட வெளிச்சம் ஆகிடும். யாருக்கிட்ட பணம் வாங்கிட்டு இதெல்லாம் செய்றாரு, என்ன நாடகம் என்பதெல்லாம் இன்னும் கொஞ்சம் நாள்ல வெளிய வந்துரும்.
விஜய்யை முதலில் அவர் கொள்ளையடிச்ச பணத்தை வெளியில் விட சொல்லுங்க.. சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒன்றரை கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஒரு நபர் தான் விஜய். அடிக்க அடிக்க பந்து உந்தும். அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். திமுகவை திட்ட திட்ட வெற்றிகள் குவியும்.
சிவி சண்முகம்
அதிமுக டெல்லிக்கு அடிமை என சொல்வதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழின துரோகி காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக. கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி மக்களை மீண்டும் ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே திமுகவின் எண்ணமாக உள்ளது.
வானதி சீனிவாசன்
முதல்வர் ஸ்டாலின் கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை நாட்கள் ஆகிறது? அதெல்லாம் ஊழலாக தெரியவில்லையா? ஊழல் வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கும் அமைச்சர்களை வைத்துக் கொண்டும், ஊழல் குற்றச்சாட்டிற்காக பதவியில் இருந்த அமைச்சரை வீட்டிற்கு அனுப்பிய பெருமைக்குரியவர் தான் முதல்வர் ஸ்டாலின்.
விஜய் புதுப் புது வார்த்தைகளை வைத்து பேசினாலும் அல்டிமேட்டாக திமுகவை வீழ்த்தப் போவது தேசிய ஜனநாயக கூட்டணியே. மேடை ஏறலாம்.. வசனம் பேசலாம்.. கூட்டத்தையும் கூட்டிக் காட்டலாம்.. ஆனால் வாக்குகள் விழுவது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான்.












Click it and Unblock the Notifications