இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 25/02/2026: சசிகலா முதல் செல்லூர் ராஜூ வரை.. தலைவர்களின் நச் கருத்துக்கள்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இன்னும் இரு மாதங்களே இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுகள், கருத்து மோதல்கள் என இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (25/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

முதல்வர் ஸ்டாலின்
வளர்ச்சியடைந்த இடத்தில் பாஜக இருக்காது.. பாஜக இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது.. பாஜக எனும் டப்பா என் ஜினை நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக எனும் மூழ்கும் கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான்.. ராஜ்ஜியம் கிடைக்காது.. தமிழ்நாடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்பட வேண்டும். டெல்லியில் இருந்து ஆளப்படக் கூடாது.
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர்.. ஒருவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் ரூ.15 லட்சம் தரேன்னு சொல்லி வடை சுட்டமாதிரி, இப்போது எடப்பாடி பழனிசாமி வெரைட்டி வெரைட்டியா வடை சுட்டுட்டு இருக்கார். ஆனால் இந்த வடைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.
சசிகலா
நான் ஒருவரை முதல்வராக உட்கார வைத்து விட்டு சென்றேன். ஆனால் என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் வீசினால் எப்படி இருக்கும்? ஆட்சியில் உட்கார வைத்த என்னை, ஈட்டி வைத்து குத்தியது போல செய்தனர். இதை எல்லாம் மீறி, நான் விடுதலை ஆகி சென்னைக்கு வந்தேன். இன்று கட்சி சரிந்து போய்விட்டது. எப்படியாவது ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் நினைத்து இருந்தால் அப்போதே எதையும் செய்திருக்க முடியும்.
நான் தொடங்கியிருக்கும் புதிய கட்சி ஒரு திராவிட கட்சியாக, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் ஏழை-எளிய சாமானிய மக்களுக்கான ஒரு கட்சியாக, எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்கின்ற ஒரு கட்சியாக செயல்படும்.
கிரிஷ் சோடங்கர்
காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதற்கு தமிழக வெற்றிக் கழகம் தயாராக இருக்கிறது. கூட்டணி தொடர்பாக அரசியலில் நீங்கள் எல்லாரிடம் பேசத்தான் வேண்டும். எந்த கட்சி தான் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படாது..
கமல்ஹாசன்
பொதுத்தேர்வுகள் நெருங்கும் நிலையில் சென்னையில் மின்சார ரயில் சேவைகள் குறைத்து இயக்கப்பட்டு இருப்பது நம் மாணவர்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்துள்ளது. முன்னறிவிப்போ, முன் திட்டமிடலோ இல்லாமல் திடீரென மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியினை அளிக்கிறது. தென்னக ரயில்வே உடனே செயல்பட்டு மக்கள் படும் இன்னல்களை சரி செய்ய வேண்டும்.
செல்லூர் ராஜூ
பாக்யராஜ், டி ராஜேந்தருக்கு கூட தான் பெண்கள் அதிக அளவில் கூடினார்கள்.. அவர்களால் வெற்றி பெற முடிந்ததா? விஜய்யும் அப்படித்தான்.. பாஜக தமிழகத்திற்கு அதிக நிதியினை தருகிறது. திருக்குறள் ஒலிக்க பாஜக தான் காரணம்.. மோடியா லேடியா என்று ஜெயலலிதா கூறியது தேர்தலுக்கு தேர்தல் மாறும்..
ராமதாஸ்
கிடைக்கும் வாகனத்தில் ஏறி பயணம் செய்தால் நமக்கான இலக்கை அடைய முடியாது.. நமக்கான பயணம் தூரமானது.. நமக்கான வாகனம் அருகே வந்துவிட்டது.. அதில் தான் பயணிக்க போகிறோம்..
உதயநிதி ஸ்டாலின்
திருமணம் என்பது இன்றைக்கு ஒரு செலவுக்குரிய விஷயமாக மாறிவிட்டது. எப்போதுமே திருமணத்தைச் சிக்கனமாக நடத்த வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. மகளிர் மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனெனில், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த 4 வருடம் 10 மாதங்களும் மகளிருக்கான அரசாக, திமுக அரசு செயல்பட்டிருக்கிறது. இன்றைக்குத் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக 11.19 சதவீத வளர்ச்சியோடு ஒரு சிறந்த மாநிலமாக மாறியுள்ளது.
டிடிவி தினகரன்
எந்த ஒரு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. அதனால், யாருக்கும் எந்த மனவருத்தமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறினேன். அது யாருடைய வற்புறுத்தலும், அழுத்தமும் கிடையாது. திமுக குறித்து ஓ. பன்னீர்செல்வம் பேசியதை, ஜெயலலிதாவின் தொண்டர்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள்.
திருமாவளவன்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தது அந்த கட்சி ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை அவர் செய்திருக்கலாம். விஜய் யார் கூறுவதையோ, எழுதிக் கொடுப்பதையோ பேசுகிறார். திமுக எதிர்ப்பை மட்டுமே பேசுகிறார். யாருக்காக கட்சி தொடங்கினார்? எந்த இடத்தை நோக்கி பயணிக்கிறார்? என எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும். தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காது.
சரத்குமார்
என்னுடன் வந்து இயக்கத்தில் இணைந்த அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. என்னுடன் 30 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்தவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். அதிமுக ஆட்சி அமைந்த பின் ரூ.10 ஆயிரம் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மக்களுக்கு செய்வதை நான் நல்லது என்று தான் சொல்கிறேன்.
-
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்? -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் -
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சீட் கொடுத்த எடப்பாடி.. சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டி -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர்












Click it and Unblock the Notifications