Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டோட்டல் சேஞ்ச்".. பாஜகவில் திமுக எம்எல்ஏக்கள்?.. கையை பிசையும் "புள்ளிகள்".. ஆக்‌ஷனில் உளவுத்துறை

தமிழக பாஜகவில் திமுக எம்எல்ஏக்களா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை பேசிய பேச்சால், திமுகவில் சில புள்ளிகள் கடுப்பாகி உள்ளனராம்.. இதனால் என்ன செய்வதென்று சிலர் கையை பிசைந்தும் நிற்கிறார்கள்... எனினும், இதையும் அரசியலாக்க முயற்சித்து வருகிறதாம் தமிழக பாஜக..!

எம்பி தேர்தலுக்கு தயாராகி வரும் தமிழக பாஜக, திமுக அரசை மட்டுப்படுத்த, எல்லாவித காய்களையும் நகர்த்த துவங்கிவிட்டது.. இதற்கான வேலைகளை கடந்த 6 மாத காலமாகவே, பாஜக முனைப்புடன் பார்த்து வருகிறது.

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஊழல் அமைச்சர்கள் குறித்த லிஸ்ட்டை செய்தியாளர்களிடம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்..!

 சீக்ரெட் பைல்கள்

சீக்ரெட் பைல்கள்

இன்னும் இதுபோன்ற பல லிஸ்ட்கள், ஒவ்வொரு துறை குறித்தும், ஒவ்வொரு மாதமும் அம்பலப்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.. அதேபோல, ஊழல் புகார்களுக்கு உள்ளானவர்கள் குறித்த ஃபைல்கள், ரிப்போர்ட்கள், ஆதாரங்களை திரட்டி ஆளுநர் ரவியிடமும், பாஜக மேலிடத்துக்கும் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.. இதுபோக, மேலும் சில அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து, கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த ஜேபி நட்டாவிடமும் சீக்ரெட் ஃபைல்களாக தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இவைகளை வைத்து கொண்டு, பாஜக மேலிடம் இனி மெல்ல மெல்ல தன்னுடைய அரசியல் கணக்கை ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.

 மர்ம மரணங்கள்

மர்ம மரணங்கள்

அடுத்ததாக, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்தது.. இதில் முதலில் உள்ளது லாக்கப் மரணங்கள், அடுத்துள்ளது கஞ்சா புழக்கம், இதற்கடுத்தபடியாக உள்ளது பள்ளி மாணவிகளின் மரணங்கள்.. இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆதாரப்பூர்வமாக திரட்டி, அத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் வீடியோக்களையும் இணைத்து மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக, இதையும் பாஜக அரசியலாக்கும் என்கிறார்கள்.

 கமிஷன்கள்

கமிஷன்கள்

இப்போது திமுகவை டேமேஜ் செய்ய இன்னொரு புது முயற்சியில் தமிழக பாஜக இறங்கி உள்ளதாம்.. நேற்று முன்தினம் அண்ணாமலை செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், திமுக எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைய உள்ளார்களாமே? யார் அவர்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு அண்ணாமலை அவர்கள் யார் என்பதை ஓபனாக தெரிவிக்க மறுத்துவிட்டார்.. மாறாக, அனைத்து கமிஷனும் கோபாலபுரம் செல்வதால் இப்போதுள்ள எம்எல்ஏக்கள் விரக்தியில் உள்ளனர்.

 செழிப்பு + எரிச்சல்

செழிப்பு + எரிச்சல்

அதனால்தான், எம்எல்ஏக்கள் எம்பிக்கள் நேரடியாக சென்று பொதுமக்களை மிரட்டி கமிஷன் கேட்கும் அளவிற்கு சென்றுவிடுகிறார்கள்.. இன்னும் கொஞ்ச நாளில் பாருங்கள், சாலையை மறித்து தடுத்து பறிக்கக்கூடிய நிலை கூட தமிழகத்தில் ஏற்படலாம் என்று கூறியிருந்தார். அண்ணாமலை இப்படி சொன்ன கருத்துதான், திமுகவின் சில புள்ளிகளுக்கு எரிச்சலை தந்துள்ளதாம்.. 10 வருடம் இல்லாமல் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்ட நிலையில், ஒன்றும் பெரிதாக, செழிப்பாக்கி கொள்ள முடியவில்லையே என்று புலம்பி கொண்டிருக்கிறார்களாம்..

ஃபைல்கள்

ஃபைல்கள்

போதாக்குறைக்கு, அண்ணாமலையும், திமுக பற்றின குற்றச்சாட்டுகளை விலாவரியாக லிஸ்ட் போட்டு சொல்லிவிடுவதால், ஒருசிலர் எந்த ஃபைலிலும் கை வைக்கவே யோசிக்கிறார்களாம்.. அதற்கேற்றவாறு திமுக மேலிடமும் பலமுறை வார்னிங் தந்துவிட்டதாம்.. "யாராவது ஏதாவது சிக்கலில் சிக்கினால், அதேற்கு தலைமை பொறுப்பேற்காது, ஏதாவது நாம் தவறு செய்ய மாட்டோமா? என்று பாஜக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடிக் கொண்டிருக்கும்போது, அதற்கு இடம்தந்துவிடாதீர்கள்..

 விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

ஏற்கனவே அண்ணாமலை, சில துறைகள் மீதான குற்றச்சாட்டுகளை புள்ளிவிவரங்களுடன் பிரஸ்மீட்டில் அம்பலப்படுத்தி வருகிறார்.. இந்த ஃபைல்கள் எப்படி பாஜக கையில் கிடைத்தன? திமுக அரசில் உள்ள கருப்பு ஆடு யார் என்பது குறித்தும் உளவுத்துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.. அதனால், ஏடாகூடமாக ஏதாவது செய்து விட வேண்டாம், மக்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.. அதுதான் இப்போது முக்கியம்" என்று கண்டிப்பு உத்தரவு போடப்பட்டு விட்டதாம். இதனாலேயே சில முக்கிய புள்ளிகள், பாஜக மீது கடுப்பாகி உள்ளார்களாம்..!

திமுக களையெடுப்பு

திமுக களையெடுப்பு

இதனிடையே இன்னொரு தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது.. சில முக்கிய அமைச்சர்களுக்கு பாஜக குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, செந்தில்பாலாஜி, பிடிஆர், ஆ.ராசா, பொன்முடி போன்றோர் மீதான வழக்குகளை துரிதப்படுத்தவும், தூசி தட்டி எடுக்க சொல்லவும் வலியுறுத்தியவாறே வருகிறது. ஏற்கனவே பலமுறை சில அமைச்சர்கள் மீதான புகார்கள் தரப்பட்டும், அதனால் பெரிய பலன் எதுவும் கிடைக்காத நிலையில், திமுகவின் இந்த 3 முக்கிய புள்ளிகளை சுற்றி சுற்றி வரும் பாஜக, அவர்களை எந்தவிதத்திலாவது டேமேஜ் செய்யும் முயற்சியில் அல்லது வழக்குகளின் அடிப்படையில் மக்கள் மன்றத்தில் நீதி கேட்கவும் வியூகங்களை எடுத்துள்ளதாம்..

மோப்பம்

மோப்பம்

குறிப்பாக, பிடிஆர் ஏதாவது பேசினால், அதைவைத்தே அவர் மீது வழக்குகள் தொடுப்பது பாய்ச்சுவது அல்லது பொதுவெளியில் விமர்சனத்தைக் கிளப்பி அவரது மதிப்பை குலைப்பது பாஜகவின் முக்கிய அஜெண்டாவாகவே உள்ளதாம்.. பாஜக தன்னை விடாமல் கண்காணிக்கிறார்கள் என்பதை பிடிஆர் தரப்பும் மோப்பம் பிடித்துவிட்டதால், தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து, "அனைவருமே ஜாக்கிரதையாக இருங்க.. ரெகமண்டேஷன் போன்ற தேவையில்லாத சமாச்சாரங்களை என்னிடம் கொண்டுவராதீங்க" என்று கண்டிப்பான உத்தரவும் போட்டுள்ளாராம் பிடிஆர்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+