தமிழகத்தில் 8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலானது- வெளியே வந்தால் கைது!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் இன்று காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது வரும் 28-ந் தேதி இரவு 9 மணி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. மே 3-ந் தேதியன்று 40 நாட்கள் லாக்டவுன் நிறைவடைய உள்ளது.

அதேநேரத்தி; ஏப்ரல் 20-ந் தேதி முதலே லாக்டவுனில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் பல மநிலங்களில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதால் லாக்டவுன் நீடிக்கப்பட்டு தளர்வுகள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்கு, தீவிர நடவடிக்கைகளில் ஒன்றாக சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னை, சேலம், மதுரை மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
சேலம், திருப்பூரில் 3 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இவை அல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர், தென்காசி, திருவாரூர் மாவட்டங்களில் இன்று ஒருநாள் மட்டும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பெரம்பலூரில் குறிப்பிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கும் வேதாரண்யம் நகராட்சியில் முழு ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது.
மொத்தமாக 8 மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் மருந்து கடைகள் மட்டுமே இயங்கும். பிற கடைகள் எதுவும் இயங்க அனுமதி இல்லை. நடமாடும் காய்கறிகள் உரிய அனுமதியுடன் வீடு தேடி வரும்.
இதனைத் தவிர வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்தாலே கைது செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications