விட்டாச்சு லீவ்.. பரனூர் டோல்கேட்டில் இப்பவே ஆரம்பிச்சிடுச்சே.. நைட்டு தான் இருக்கு சம்பவமே
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. பள்ளிகளை பொறுத்தவரை இன்று தொடங்கி, வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில வழி கல்வியில் படிக்கும் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்பு வரை டிசம்பர் 11 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 21 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்று முடிந்தது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்வு தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.

இதனால் இன்று முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளை பொறுத்தவரை இன்று கடைசி தேர்வு நடக்கிறது. நாளை அதாவது டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 நாட்கள் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பலர் பெற்றோருடன் சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.
இதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பல பெற்றோர் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். தொடர்விடுமுறை காரணமாக இன்று காலை முதலே ஏராளமானோர் சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களை நோக்கி செல்கிறார்கள். இதன் காரணமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இன்று பலருக்கும் தேர்வு முடிவதுடன், பலர் வேலை முடிந்து மாலைதான் கிளம்புவார்கள் என்பதால், இன்று இரவு பெருங்களத்தூர் முதல் பரனூர் சுங்கச்சாவடி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் கிண்டி கத்திப்பாரா முதல் பல்லாவரம், குரோம்பேட்டை தாம்பரம் வரையிலும், கோயம்பேடு முதல் கிண்டி வரையிலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். பலரும் சொந்த ஊருக்கு செல்வதால் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஏராளமான ஆம்னி பேருந்துகளும் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும். எனவே இரவு சென்னை நகர் முழுவதுமே நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சொந்த ஊர் செல்வோர் முன்னதாக கிளம்பி செல்வது நல்லது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications