கூடுவாஞ்சேரி டூ பரங்கிமலை.. மொத்தம் 15 "ஸ்பாட்".. ரயில் பயணிகளுக்கு பறந்து வந்த மெசேஜ்.. என்ன பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு ரயில்வே முக்கிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளது.. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது...!!

கோடை விடுமுறை துவங்கிவிட்டதால், பயணிகளின் வருகையையொட்டி, தெற்கு ரயில்வே ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை முன்பு வெளியிட்டிருந்தது..

அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி இடையே வருகின்ற மே 11, 18 மற்றும் 25 ஆகிய நாட்களில் இயக்கப்படும். மறுமார்க்கம் திருநெல்வேலியில் இருந்து வருகின்ற மே 12, 19 மற்றும் 26-ம் தேதிகளில் சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும். இதேபோன்று, நாகர்கோவில் - தாம்பரம் இடையே வருகின்ற மே 14, 21, 28 ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய நாட்கள் இயக்கப்படும்.

Train: Big announcement by southern railway and 15 railway stations are being upgraded with modern facilities

சிறப்பு ரயில்கள்: மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து முறையே மறுநாட்கள் நாகர்கோவில் செல்லும். திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அத்துடன், தாம்பரம் - திருநெல்வேலி இடையே மே 10, 17, 24 ஆகிய நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் முறையே மறுநாட்கள் தாம்பரத்துக்கு கிளம்பும். தாம்பரம் - நாகர்கோவில் இடையே மே 12, 19, 26 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

இந்த ரயில், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மே 13, 20, 27 ஆகிய இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின்கீழ் தெற்கு ரெயில்வேயில் 90 ரெயில் நிலையங்கள் புதுப்பித்து மேம்படுத்தப்படுத்த போவதாக கூறப்படுகிறது.. இந்த 90 ரெயில் நிலையங்களை கண்டறிந்து அங்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுவதற்கான ஒப்பந்தங்களை ஆலோசகர்களுக்கும் ரயில்வே வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் விலை ரூ.11.22 கோடி என்கிறார்கள்.

ரெயில்வே வாரியம்: இது தொடர்பாக தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தரப்பில் சொல்லும்போது, "ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில்வே வாரியம், அம்ரித் பாரத் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக தெற்கு ரெயில்வே டெண்டர் விடுவதற்காக ரூ.881.42 கோடி நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறது. தெற்கு ரெயில்வேயின் 6 மண்டலங்களின் கீழ் வரும் 90 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

Train: Big announcement by southern railway and 15 railway stations are being upgraded with modern facilities

சென்னை கோட்டத்தில், கிண்டி, பரங்கிமலை, கடற்கரை, பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், சூலூர்பேட்டை, அரக்கோணம், மாம்பலம், திருத்தணி, ஜோலார்பேட்டை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய 15 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த மேம்படுத்துதல் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

ரெயில் நிலையங்கள்: பிளாட்பாரங்களின் உயரத்தை அதிகரிப்பது, பயணிகள் நடந்து செல்லும் நடை மேம்பாலங்களை அகலப்படுத்துதல், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் 2-வது நுழைவுவாயிலை ஏற்படுத்துதல், ரெயில் நிலையங்களின் கட்டமைப்பின் உட்புறங்களை மேம்படுத்துதல், கழிப்பறைகளை புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன... இப்படி மொத்தம் 150-க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளனர்..

தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பானது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+