Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தாம்பரம்" துள்ளி குதிக்குதே.. ஆஹா, செங்கோட்டை வரை.. ரயில் பயணிகளுக்கு பறந்து வந்த மகிழ்ச்சி செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம்- செங்கோட்டை இடையேயான ரயில், இனி வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படுகின்றது... இதற்கான சேவையும் நேற்றைய தினம் துவங்கப்பட்டு விட்டது.. இது ரயில் பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

செங்கோட்டை - தாம்பரம் புதிய வாராந்திர அதிவேக ரயில் சேவையை கடந்த மாதம் பிரதமர் மோடி சென்னையில் சமீபத்தில் துவங்கி வைத்தார். இந்த ரயில் (20684 ) கடந்த மாதம் 17ம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து முதல் சேவையை தொடங்கியது.

Train: Big announcement by southern railway and sengottai to tambaram train via nellai will run three time weekly

செங்கோட்டையிலிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு தென்காசி பாவூர்சத்திரம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்றடையும்.

புதிய கோரிக்கை: இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியாகும்போது ஏப்ரல் மே மாதங்களில் வாரம் ஒரு முறையும், ஜூன் மாதம் முதல் வாரம் 3 முறை ரயிலாகவும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் மாதம் முதல் இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து வாரம் மும்முறை இயக்கப்படவும் உள்ளதாக கூறப்பட்டது.. ஆனால், பல வருடங்களாகவே, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடி ரெயில் இல்லையே பயணிகள் கவலையை தெரிவித்தபடியே இருந்தனர்..

வாரம் 3 முறை: இவர்களின் குறையை போக்குவதற்காகவே, இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.. அதேபோல, இந்த ரெயிலை வாரத்திற்கு 3 முறை இயக்க வேண்டும் என்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர், ரெயில் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வந்தனர்.. இந்த கோரிக்கையையும் தென்னக ரயில்வே நிறைவேற்றிவிட்டது. இதுகுறித்து 4 நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், "ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் வண்டி எண். 20683 சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும்.. மறு மார்க்கமாக வண்டி எண். 20684 செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.

ஹேப்பி நியூஸ்: இந்த ரெயில்கள் விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 2 இரண்டடுக்கு ஏசி பெட்டிகள், 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்படுகிறது" என்று தென்னக ரயில்வே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எதிர்பார்த்தபடியே, நேற்றுமுதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.. அதன்படி, தாம்பரம்- செங்கோட்டை இடையேயான ரயில், இனி வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும்.

மறுமார்க்கம்: அதாவது, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி வியாழன், ஞாயிறு, செவ்வாய் ஆகிய நாள்களிலும், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு திங்கள், புதன், மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயிலானது தாம்பரம்-செங்கோட்டை மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்படும்.

செங்கோட்டை: விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர் சத்திரம், தென்காசி மார்க்கமாக மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.., இதேபோல் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் மேற்கண்ட ரயில் நிறுத்தங்களில் நின்று, மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+