ரயில் பயணிகள் + இல்லத்தரசிகள்+ வங்கி ஊழியர்கள்... கண்ணா 3 லட்டு திண்ண ஆசையா.. செம்ம குட்நியூஸ்
சென்னை: முதலில் ரயில் பயணிகளுக்கு சத்தமே இல்லாமல் கட்டணத்தை குறைத்த மத்திய அரசு, அடுத்து இல்லதரிசிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரே நாளில் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது. அதே நாளில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஊதிய உயர்வினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
2024ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 3வது முறையாக வெல்லும் முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,மத்திய அரசு அடுத்தடுத்து3 குட்நியூஸ்களை வெளியிட்டிருக்கிறது அவற்றினை பார்ப்போம்.

பயணிகள் ரயில் கட்டணம்: யணிகள் ரயில்களில் 2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காலம் தொடங்குவதற்கு முன் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் ஆகும். ஆனால் கொரோனா பாதிப்பு தொடங்கிய போது 200 கிலோ மீட்டருக்குக் குறைவான தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது . பயணிகள் ரயில்களில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு 30 ரூபாயாக்கப்பட்டது. கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய போது குறைக்கப்படாத கட்டணம், கடந்த பிப்ரவரி 27ம் தேதி குறைக்கப்பட்டது. பயணிகள் ரயில்களில் கொரோனா காலத்துக்கு முன்பிருந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த முறை உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் ரயில்வே அறிவித்தது.
சிலிண்டர் விலை குறைப்பு: அடுத்ததாக மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்று வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது பெண் சக்திக்கு பயனளிக்கும் என்றும் சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறினார். மேலும் 100 ரூபாய் சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
வங்கி ஊழியர்கள்: இல்லத்தரசிகளுக்கு சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட அதே நாளில் கி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஊதிய உயர்வு மற்றும் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை ஆகியவற்றுக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. கணிசமான சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் 5 நாட்கள் பணி ஆகிய கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் பல காலமாக கேட்டு வந்தார்கள். இது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய வந்த நிலையில். ஊதிய உயர்வு கோரிக்கைக்கு நேற்ற தீர்வு காணப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுடன் இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்த ஊதிய உயர்வு மூலம் நாடு முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இந்த ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊதிய உயர்வால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.8,284 கோடி செலவாகும் என கூறப்படுகிறது.
வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை: இதைப்போல வாரத்துக்கு 5 நாட்கள் பணி (சனி, ஞாயிறு விடுமுறை) குறித்த கோரிக்கையும் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறதாம்.. அந்தவகையில் வங்கிகளின் மாற்றியமைக்கப்பட்ட வேலை நேரம் தொடர்பாக அரசின் அறிவிப்பு வெளியான பிறகு இது அமலாகும் என்கிறார்கள்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications