சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயணிகளுக்கு குட் நியூஸ்! மளமளவென குறையும் கொரோனா.. இனி பழைய டைமிங்கில் சென்னை புறநகர் ரயில் சேவை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை புறநகர் ரயில் சேவை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் முதலில் கொரோனா பரவல் ஏற்பட்டது. அப்போது கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 3 முக்கிய செயற்கைகோள்கள்.. நாளை விண்ணில் ஏவும் இஸ்ரோ.. என்ன சிறப்பு? ஒரே நேரத்தில் 3 முக்கிய செயற்கைகோள்கள்.. நாளை விண்ணில் ஏவும் இஸ்ரோ.. என்ன சிறப்பு?

குறிப்பாக, வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

 கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாகச் சென்னை புறநகர் ரயில் சேவையும் குறைக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த சில ஜன. மாதம் தமிழகத்தில் உச்சம் தொட்ட ஓமிக்ரான் கொரோனா அலை, கடந்த சில வாரங்களாக மளமளவெனக் குறையத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிறக்கும் கீழ் குறைந்தது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா தளர்வுகள்

கொரோனா தளர்வுகள்

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னை புறநகர் ரயில் சேவை

சென்னை புறநகர் ரயில் சேவை

இந்தச் சூழலில் சென்னை புறநகர் ரயில் சேவை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நாளைய தினம் முதல் சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் புறநகர் ரயில் சேவைகள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட எண்ணிக்கையில் நாளை முதல் மீண்டும் ரயில் சேவை இருக்கும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

 அட்டவணை

அட்டவணை

சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 84 ரயில் சேவைகள், சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் - 254 ரயில் சேவைகள் உட்பட மொத்தம் வார நாட்களில் 658 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வார இறுதி நாட்களிலும் கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட அட்டவணையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயணம் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Chennai suburban trains will run in 100% capacity from tomorrow: As Corona cases decrease, trains to usual capacity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X