Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வில்லங்க செயலி.. பெண்ணைப் பார்த்ததும் மயங்கிய சென்னை இளைஞர்!. நேரில் போய் மொத்தமும் போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இளைஞரிடம் நூதன முறையில் பணப் பறிப்பு நடந்துள்ளது. ஆபாச செயலில் இளம் பெண் புகைப்படத்தை பார்த்து ஏமாந்த இளைஞர் நேரில் பார்க்க சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு தான் அவருக்கு அதிர்ச்சிகர சம்பவம் காத்திருந்தது.

சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் உதயகுமார் (வயது 21). இவர் அப்பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் ஆகும். வாலிபர் உதயகுமாருக்கு அழகான பெண்ணுடன் பேசி பழக ஆசை இருந்துள்ளது. இதனால் அவர் செல்போன் செயலி மூலம் அழகான பெண்களை தேடி வந்தார்.

Chennai Transgender Cell Phone App

அந்த வகையில் சமீபத்தில் அஸ்விதா என்ற பெயரில் பெண் ஒருவர் அவருக்கு ஆன்லைன் செயலி மூலம் அறிமுகம் ஆகி உள்ளார். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை பார்க்கும் போது மிக அழகாக இருந்தது. இதனால் இந்த பெண்ணிடம் பேசி உல்லாசம் அனுபவிக்க நினைத்தார். இதனை அந்த பெண்ணிடமும் தெரிவித்தார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு ஒரு முகவரியையும் கொடுத்துள்ளார். அதன் பேரில் வாலிபர் உதயகுமார் சென்னை வளசரவாக்கம் பகுதிக்கு சென்றார். அங்கே தினேஷ் குமார் என்ற வாலிபர் ஒருவர் வாங்க வாங்க என்று சொல்லி அழைத்துக் சென்றார். அந்த அறையில் திருநங்கை ஒருவர் இருந்தார். அப்போது தான் அஸ்விதா என்ற பெயரில் ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமான பெண் இந்த திருநங்கை என்பது உதயகுமாருக்கு தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அஸ்விதா என்ற அந்த திருநங்கையும் தினேஷ் குமாரும் சேர்ந்து வாலிபர் உதயகுமாரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த செல்போனை பரித்தனர். மேலும் பணம் எவ்வளவு வைத்திருக்கிறாய் என்று பார்த்து கையில் இருந்த பணத்தையும் கத்தியை காட்டி மிரட்டி பிடுங்கி விட்டனர்.

இதையடுத்து அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். இதனால் பயந்து போன உதயகுமார் அங்கிருந்து வீட்டுக்கு வந்து விட்டார். பிறகு இது குறித்து சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள அஸ்விதா வீட்டில் சென்று சோதனை நடத்தினர்.

இதில் திருநங்கை அஸ்விதா இதே பாணியில் பல பேரிடம் பணம் செல்போன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை ஏமாற்றியது தெரியவந்தது, இதையடுத்து அஸ்விதா, அவரது நண்பர் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் ஆன்லைன் செயலியில் அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பிவிட்டு வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைப்பு விடுப்பார்கள்.

அதனை நம்பி வரும் இளைஞர்களை அடித்து உதைத்து அவர்களிடம் இருந்த பணம் செல்போன்களை பறிமுதல் செய்து ஏமாற்றி வந்துள்ளனர். நடந்தது அசிங்கம் என நினைத்து பலரும் புகார் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அடிக்கடி இதே போன்று பல்வேறு நபர்களை ஏமாற்றி உள்ளனர். இவர்களது நண்பர் ஒருவரும் இந்த ஏமாற்று வேலைக்கு துணையாக இருந்துள்ளார்.

அவரை கைது செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவரிடமும் இருந்து 11 செல்போன்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், ரூபாய் 95 ஆயிரம் ரொக்கம், கத்தி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் செயலி மூலம் இதுபோன்று வரும் மோசடி வலைகளில் யாரும் சிக்கிவிட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தல் விடுத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+