அகவிலைப்படி உயர்வு.. 7 ஆயிரம் பேருக்கு நடந்தது தெரியுமா? முதல்வரின் தனிப்பிரிவில் பறந்த கோரிக்கை
சென்னை: சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகவிலைப்படி உயர்வு பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். குறைவான ஒய்வூதியம் (ரூ.5,000-6000) பெறுவோரும் பல்வேறு நோய்களுக்கு இடையே வறுமையில் சிக்கி உழன்று கொண்டிருக்கின்றனர் எனவே அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 1998-க்கு முன்பு வரை வருங்கால வைப்பு நிதித் திட்ட ஓய்வூதியத்தில் இருந்த போக்குவரத்து கழக தொழிலாளர்க்ள, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஓய்வூதிய நம்பகம் என்ற அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டார்கள். ஓய்வூதியத் திட்டத்தைச் சீரமைக்க கடந்த 2008இல் சீரமைப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. மேலும், கடந்த 2010 ஆம் ஆண்டில் ஓய்வூதிய நம்பகத்துக்கு வருமான வரிச் சட்டத்திலிருந்து விலக்கும் பெறப்பட்டது. இந்த நடவடிக்கை போக்குவரத்து தொழிலாளர்களை பாதித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இதேபோல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போதெல்லாம் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களும் அகவிலைப்படி உயர்வு பெறத் தகுதி பெற்றவர்கள் என்பது விதியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும் பயனில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் ஓய்வூதியர்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்க துணைச் செயலாளர் என்.லோகநாதன், சென்னை மண்டலத் தலைவர் ஏ.அப்துல் அஜீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், முதல்வரின் தனிப் பிரிவு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலர், போக்குவரத்து செயலர், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்களில் அவரால் வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை பெற்று ஆயிரக் கணக்கானோர் வாழ்ந்து வருகிறோம். இந்த ஓய்வூதியத்தில் அவ்வப்போது உயரும் அகவிலைப்படியை 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிதிநிலையை காரணம் காட்டி வழங்கவில்லை.
தற்போது வரை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகவிலைப்படி உயர்வு பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். குறைவான ஒய்வூதியம் (ரூ.5,000-6000) பெறுவோரும் பல்வேறு நோய்களுக்கு இடையே வறுமையில் சிக்கி உழன்று கொண்டிருக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வு பணப்பலன்களை நம்பி மகளின் திருமணம், மகன் கல்வி, வீடு கட்ட வாங்கிய கடன் போன்றவற்றை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, எங்கள் சூழலை உணர்ந்து அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications