சென்னைவாசிகளே.. நோட் பண்ணிக்குங்க.. மெட்ரோ பயணிகளுக்கு "இது" தான் கட்டாயம்.. அதுவும் நாளைக்கே அமல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் இனி பயணிக்கும் பயணிகளுக்காக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இது சென்னைவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சென்னை மெட்ரோவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அந்தவகையில், தற்போது, சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் செல்லும் பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, அதன்பிறகு மெட்ரோவில் ஏறி சென்று வருகின்றனர்... இதற்கு கட்டணமாக 6 மணிநேரத்துக்கு டூவீலர் வாகனங்களுக்கு ரூ.20-ம், காருக்கு ரூ.30-ம் வசூலிக்கப்படுகிறது.

சில்மிஷம்: ஆனால், இப்படி வாகனம் நிற்கும் இடத்தில் சிலர் ஜோடியாக வாகனத்தில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, அதற்கு கட்டணத்தையும் செலுத்திவிட்டு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.. சிலர் சில்மிஷங்களிலும் ஈடுபட்டும் வருகின்றனர்.. மேலும் சிலர் வாகனங்களில் உள்ளே இருந்து கொண்டே சிகரெட் பிடிப்பதும், தண்ணி அடிப்பதும் என பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன.. இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகளும் உருவாகிவிடுகிறது..
பொதுஇடத்தில் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஊழியர்கள், அதை தட்டிக்கேட்டாலும், "நீ யார் அதை கேட்க? வண்டி நிறுத்துவதற்குதான் கட்டணம் செலுத்தி விட்டோமே? நாங்கள் என்ன செய்தாலும் தட்டிக் கேட்க நீங்கள் யார்? என்று வாய் தகராறும் வெடித்து விடுகின்றன.. இதை தடுக்காவிட்டால் அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று பலரும் எச்சரித்துவந்ததுடன், இதுதொடர்பாக நிறைய புகார்கள் மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும் சென்றபடியே இருந்தன.. இதையடுத்து, அனைத்து வாகன நிறுத்தும் இடத்திலும் வாகனத்தை நிறுத்திவிட்டு உரிமையாளர்கள் உடனடியாக வெளியில் சென்றுவிட உத்தரவிடப்பட்டது..
கெடுபிடி: மேலும், வாகனத்தில் உட்காருவதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையினை அனைத்து மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயிலிலும் அதிகாரிகள் வைத்துள்ளனர். அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்னொரு அதிரடியை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.
அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.. அதாவது, பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் என்றும்,

நாளை முதல் அமல்: இந்த நடைமுறையானது மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தது. இதன் மூலம் பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களில் வேகமாக நுழைவது, வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை, பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற நன்மைகள் கிடைக்கும். மேலும், பயணிகள் மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், வாகன நிறுத்தும் இடத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
வாகன நிறுத்தும் இடத்துக்கான அனுமதி பயண அட்டைகளுடன் மட்டுமே இந்த பயண அட்டை கிடைக்கும்... அதனால், அனைத்து பயணிகளும் மெட்ரோ ரயில் பயண அட்டைகளை விரைவாக பெற வேண்டும்" என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.. அந்தவகையில், நாளைய தினம், அதாவது ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்து இந்த முறை அமலுக்கு வர உள்ளது... நாளை முதல், அனைத்து மெட்ரோ ஸ்டேஷன்களிலும் இருக்கும் பார்கிங் இடங்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க பணத்திற்குப் பதிலாக மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்...
பார்க்கிங் ஏரியா: பார்கிங் ஏரியாக்களில் வாகனத்தை வேகமாக இயக்குவதையும் இதன் மூலம் தடுக்கப்படுவதுடன், பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையும் இதன் மூலம் ஏற்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.. இந்த மெட்ரோ அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதே அட்டையைப் பயன்படுத்தி நாம் மெட்ரோ ரயில்களில் பயணங்களையும் இனி நாம் மேற்கொள்ளலாம். மெட்ரோ இணையதளத்திலும் இந்த அட்டைக்கு ரீ-சார்ஜும் செய்து கொள்ளலாம்..!!
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications