டெட் தேர்வு உள்பட.. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 -2021ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு (teacher eligibility test) ஜூன் 27, 28ந் தேதி நடைபெற உள்ளதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு மே 2 மற்றும் 3ம் தேதி நடைபெற உள்ளதாகவும் டிஆர்பி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்த 27.11.2019ல் விரிவாக வெளியிட்டுள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் 97 காலியிடங்கள் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் பணிக்கு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் நடைபெற உள்ளது.
தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் படிக்க வேண்டிய பாட அட்டவணை (syllabus) மற்றும் வினாத்தாள் வகைகள் போன்றவை www.trb.in.nic.in என்ற இணையதளத்தில் பார்க்க முடியும்.
தேர்வு காலிபணியிடங்கள், தகுதி,. வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications