ஸ்டாலின் தாத்தாவும் உதய் மாமாவும் பாராட்டினாங்க.. தங்கம் வென்ற டி.ஆர்.பி.ராஜா மகள் நிலா நெகிழ்ச்சி
சென்னை: தேசிய ஜூனியர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற டிஆர்பி ராஜாவின் மகள் நிலாவை முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.
தமிழக தொழில்துறை அமைச்சராக உள்ளவர் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா. இவரது மகள் நிலா துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றுள்ளார். இவர் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கிறார்.

அந்த வகையில் டெல்லியில் நடந்த 66ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் ஷாட்கன் ஜூனியர் பெண்களுக்கான போட்டியில் நிலா கலந்து கொண்டார். அவர் தங்க பதக்கம் வென்றார். போட்டிகளை முடித்துக் கொண்டு தங்க பதக்கத்துடன் விமானம் மூலம் சென்னை வந்தார் நிலா.
அவரை அமைச்சர் டிஆர்பி ராஜா, மனைவி ஷர்மிளா உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து ராஜாவின் மகள் நிலா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு முதல் முறையாக பதக்கம் வென்றது பெருமையாக இருந்தது. அதே போன்று தற்போது இரண்டாவது முறையும் பதக்கம் வென்றதும் பெருமையாக உள்ளது.

அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் முதல்வர் ஸ்டாலின் தாத்தா என்னை போனில் அழைத்து வாழ்த்து கூறினார். உதய் மாமாவும் வாழ்த்து கூறினார். இனி அடுத்தடுத்த இலக்குகளை அடைவேன். தமிழகத்திலேயே புதிய ரேஞ்சர் (சர்வதேச தரத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம்) அமைத்து தருவதாக உதய் மாமா தெரிவித்துள்ளார்.
அது விரைவில் வரும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. அனைத்து விளையாட்டுகளிலும் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் விளையாடி வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என தெரிவித்தார். டிஆர்பி ராஜாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். மகன் சூர்யா 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகள் நிலா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ராஜாவின் மனைவி ஷர்மிளா. இவர் சாய்ராம் கல்லூரி குழுமத் தலைவர் லியோ முத்துவின் மகளாவார்.

டி.ஆர்.பாலுவின் மகன் டிஆர்பி ராஜா 1994 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டை கிராமம் ஆகும். அவர் 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வென்றார். அது போல் 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வென்ற அவர் மூன்றாவது முறையாகவும் வென்று மன்னார்குடி எம்எல்ஏ ஆனார். அவர் தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ளார். திமுக அயலக அணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications