சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Memes:"வருண பகவான் காப்பாத்தினாரு, கால்குலேட்டர் ஜோக்ஸ்" இந்தியா - வங்கதேசம் போட்டியின் மீம்ஸ் இதோ!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியா - வங்கதேசம் இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டியை வைத்து ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வரும் மீம்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அடிக்கப்பட்ட சிக்சர், தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அடித்த அதிவேக அரைசதம், மழைக்கு பின் இந்திய அணியின் எழுச்சி, கேஎல் ராகுல் அரைசதம் என பல்வேறு விஷயங்கள் இந்தப் போட்டியில் நிகழ்ந்தன.

குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த போது விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம் இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் ஒரு கட்டத்தில் வங்கதேசம் அணி வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்த போது ரசிகர்களின் எண்ணம் என பல விஷயங்களை வைத்து ரசிகர்கள் நகைச்சுவையாக மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த மீம்ஸ்களையும் பற்றி பார்க்கலாம்.

கிளவுன் ராகுல் டூ கிளாசிக் ராகுல்

கிளவுன் ராகுல் டூ கிளாசிக் ராகுல்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இருந்தே இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லை. குறிப்பாக சிறிய அணிகளான நெதர்லாந்து அணியுடன் கூட கேஎல் ராகுல் மோசமாக ஆட்டமிழந்தார். இதனால் அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட்டை தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்தனர். இருந்தும் கேப்டன் ரோஹித் ஷர்மா நம்பிக்கை வைத்து வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தி கேஎல் ராகுல் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் ஆட்டமிழந்த போது கிளவுன் ராகுல் என்று கிண்டல் செய்த ரசிகர்கள், தற்போது கிளாசிக் ராகுல் என்று பாராட்டியுள்ளனர்.

 படையப்பா ரஜினியாக இந்தியா

படையப்பா ரஜினியாக இந்தியா

இந்தப் போட்டியில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது 7 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு எதிர்ச்சி கொடுத்தது. ஆனால் திடீரென மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வங்கதேச அணி களமிறங்கிய போது, இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். இதனை மழைக்கு முன்னால் ஆடிய இந்திய அணியை, அண்ணாமலை படத்தில் பாம்புக்கு பயந்து உளறும் ரஜினியாகவும், மழைக்கு பின் பாம்பை பிடித்து முத்தமிடும் ரஜினியாகவும் ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

தோனியின் டச்

தோனியின் டச்

வங்கதேச அணியின் பேட்டிங்கின் போது அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி திணறியபோது, கேஎல் ராகுல் அவரை ரன் அவுட் செய்து வீழ்த்தினார். இதனை 2016ம் ஆண்டு தோனி கடைசி பந்தில் ரன் அவுட் செய்ததோடு ஒப்பிட்டு, ஒரு முக்கிய ரன் அவுட் என்று ரசிகர்கள் தோனியை நினைவுபடுத்தி மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

கால்குலேட்டர் ஜோக்ஸ்

கால்குலேட்டர் ஜோக்ஸ்

இதேபோல் வங்கதேசம் அணி டிஆர்எஸ் முறைப்படி 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த போது விக்கெட்டுகள் சரிந்தாலும், தொடர்ந்து அதிரடியாக ஆடி இந்திய ரசிகர்களுக்கு பீதியை ஏற்படுத்தினார். 2007ம் ஆண்டு உலகக்கோப்பை போல் இந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டது.

ஒருவேளை தோல்வியடைந்தால், குரூப் பி பிரிவில் இந்திய அணி தேர்வாக என்ன செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கால்குலேட்டரை ஒப்பிட்டு மீம்ஸ் வெளியிட்டனர். வழக்கமாக ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் கால்குலேட்டர் ஜோக்ஸ் பகிரப்படும். இந்த மீம்ஸ்கள் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

English summary
Let's have a look at the most shared memes among the fans regarding the T20 World Cup match between India and Bangladesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X