தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு.. 2-வது இடத்தை பிடித்தது தாம்பரம்!
சென்னை: தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி முதல் இடத்தையும், 2-வது இடத்தை தாம்பரம் மாநகராட்சியும் பிடித்துள்ளது. இதேபோல் தமிழகத்தின் சிறந்த நகராட்சி மற்றும் பேருராட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நாளை செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், மாநிலங்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்றி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றும் முதல்வர் ஸ்டாலின் பிறகு உரை நிகழ்த்துவார்.

முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு முதல்வர் விருது வழங்கப்படும். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சிறப்பான மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி முதல் இடத்தையும், 2-வது இடத்தை தாம்பரம் மாநகராட்சியும் பிடித்துள்ளது. இதேபோல் தமிழகத்தின் சிறந்த நகராட்சி பட்டியலில் ராமேஸ்வரம் நகராட்சி முதல் இடத்தையும், திருப்புறைப்பூண்டி இரண்டாம் இடத்தையும் மன்னார்குடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகத்தின் சிறந்த பேருராட்சி பட்டியலில், முதல் இடத்தை விக்கிரவாண்டியும், இரண்டாம் இடத்தை ஆலங்குடியும், மூன்றாம் இடத்தை வீரக்கால்புதூரும் பிடித்துள்ளது.
இதேபோல் சென்னை மாநகராட்சியில் இருக்கும் மண்டலங்களில் முதல் இடத்தை 9-வது மண்டலமும், இரண்டாவது இடத்தை 5-ஆம் மண்டலமும் பிடித்துள்ளது. நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவின் போது முதல்வர் ஸ்டாலின் முதல் 3 இடங்களை பிடித்த மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேருராட்சி தலைவர்களிடம் விருதுகள் வழங்குகிறார்.
13 கருப்பொருளை மையமாக கொண்டு தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.2 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு மாநகராட்சிகளுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வழங்கப்படும். இதேபோல் முதல் 3 இடங்களை பிடிக்கும் நகராட்சிகளுக்கு முறையே ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
பேருராட்சிகளை பொறுத்தவரை முதல் இடம் பிடிக்கும் பேரூராட்சிக்கு ரூ.20 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் பேரூராட்சிக்கு ரூ.10 லட்சமும், மூன்றாம் இடம் பிடிக்கும் பேரூராட்சிக்கு ரூ.6 லட்சமும் வழங்கப்படும். இதேபோல சென்னை மாநகராட்சியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மண்டலங்களுக்கு முறையே ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் வீதம் வழங்கப்படும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications