கவுன்ட் டவுன் ஆரம்பம்.. மணல் மாஃபியாவிடம் ஆட்டையபோடும் பாஜக தலைகளின் லிஸ்ட்.. பகீர் கிளப்பிய சூர்யா!
சென்னை: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யாவின் லேட்டஸ்ட் சமூக வலைதள பதிவு பாஜகவினர் மத்தியில் புயலைக் கிளப்பி உள்ளது.
பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார் திருச்சி சூர்யா. திமுக மூத்த எம்.பி திருச்சி சிவாவின் மகனான சூர்யா, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த நிலையில் பின்னர் பாஜகவில் இணைந்தார். அண்ணாமலை ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த அவர், கட்சிக்குள்ளேயே பலரை விமர்சித்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்நிலையில் அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி எஸ் சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று பாஜக அறிவித்தது.
முன்னதாக, கடந்த ஆண்டும் ஒரு முறை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் திருச்சி சூர்யா. பாஜக நிர்வாகியாக இருந்த மருத்துவர் டெய்சி அருளுக்கும், திருச்சி சூர்யாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டெய்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் இருந்து 6 மாத காலம் திருச்சி சூர்யா நீக்கப்பட்டார்.
எனினும் அண்ணாமலைக்கு ஆதரவான கருத்துகளையே திருச்சி சூர்யா சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் திருச்சி சூர்யா மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டு அதே ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திருச்சி சூர்யா, பாஜக முன்னாள் தலைவரும், 2 மாநில ஆளுநராக இருந்தவருமான தமிழிசையை கடுமையாக விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதன் காரணமாக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகும், "அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது." எனக் கூறி இருந்தார் திருச்சி சூர்யா.

இந்நிலையில் தற்போது ஒரு பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ளார் திருச்சி சூர்யா. தனது எக்ஸ் தள பக்கத்தில், "திமுகவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு, மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்தில் இருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே.. Count Down Starts..." எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மணல் கடத்தல் கும்பலிடம் பணம் பெறும் பாஜக பிரமுகர்கள் பட்டியலை வெளியிடப் போவதாக திருச்சி சூர்யா அறிவித்து உள்ளது பாஜகவினர் மத்தியில் புயலைக் கிளப்பி உள்ளது.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications