விஜய் கட்சியின் ஆதவ் அர்ஜுனாவை பங்கமாய் கலாய்த்த திருச்சி சூர்யா.. பிரசாந்த் கிஷோரும் காலி
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அண்மையில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவை திருச்சி சூர்யா பங்கமாய் கலாய்த்துள்ளார். அண்மையில் 'ஒன் இந்தியா அரசியல்' யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழக வெற்றிக்கழகம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும், ஆதவ் அர்ஜூனா குறித்தும் பேசினார். பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார், காமராஜர் ஆகிய ஐந்து பேரின் பெயரையும் ஆதவ் அர்ஜுனா பார்த்து பார்த்து தான் படித்ததாக கிண்டல் செய்தார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது ஆண்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் நடந்த விஷயங்களை 'ஒன் இந்தியா அரசியல்' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விவரித்தார் திருச்சி சூர்யா. குறிப்பாக தவெகவின் ஒவ்வொரு தலைவர்கள் பேசியதையும் விமர்சித்தார்.

விஜய் நேரடியாக களம் இறங்கி சிஎம்ஆக விரும்பவதாவும் நடைமுறையில் எதார்த்தம் வேறு என்றும் கூறினார். அப்போது விஜய்யை வடிவேலு காமெடி பாணியில் நடையை பார், உடையைப்பார், அழகை பார் என்று லயோலா மணி பேசியதாகவும் திருச்சி சூர்யா விமர்சித்தார். தவெகவின் அனைத்து நிர்வாகிகளுமே மேடையில் சீட்டு இல்லாமல் பேசவில்லை என்றும், இவர்கள் ஸ்கிரிப்ட் பற்றி பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.
My All time Favourite Arjun Reddy pic.twitter.com/GA8LksKBnj
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) March 4, 2025
ஆதவ் அர்ஜூனா குறித்து பேசிய திருச்சி சூர்யா, பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார், காமராஜர் ஆகிய ஐந்து பேரின் பெயரையும் பார்த்து பார்த்து படிக்கிறார். ஐந்து பேர் பெயரையும் மனப்பாடமாக சொல்வதற்கு ஆதவ் அர்ஜூனாவால் முடியவில்லை. ஒவ்வொன்றுக்கும் இவர் தலை குனிந்து படிக்கிறார். இவர் தேர்தல் வியூக வகுப்பாளர், இவரது மண்டைக்குள் இருக்குற மூளை பெரிய விஞ்ஞானி மூளை.. ஒன்றும் இல்லாதவரை முதல்வர் ஆக்கிடுவார் என்று விளம்பரம் செய்கிறீர்கள்.. மேடையில் விஞ்ஞானி மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறார்..
ஒரு வார்த்தை கூட தமிழில் சுத்தமாக வரவில்லை. பீகாரில் இருந்த பிரசாந்த் கிஷோர் கூட தமிழை ஒழுங்காக பேசுவார் போல.. ஆதவ் பேசிய தமிழ் எங்காவது புரிந்ததா? சினிமா துறையை ஒரு குடும்பம் கையில் வைத்திருப்பதாக கூறுகிறார்.. உங்களுக்கு என்ன நஷ்டம் வந்தது? மார்டின் நாளைக்கு சினிமா புரொடக்சன் கம்பெனி ஆரம்பக்க போறாரா? லாட்டரி, ஓட்டல், சூதாட்டம் ஆகிய பிசினஸில் இருக்குறீங்க.. யார் இப்போது தொழில் போனது என்று வாயில் வயிற்றில் அடித்தார்கள்.. முதல்வராக விரும்பும் விஜய்க்கு நடிகர் என்பதை தாண்டி வேறு என்ன தகுதி இருக்கிறது.. இதற்கு முன்பு வேறு எதிலாவது வந்து நின்று இருக்கீங்களா.. என சராமாரியாக கேள்வி எழுப்பினார். இது பற்றி முழு விவரங்களை செய்தியில் உள்ள வீடியோவில் பாருங்கள்..
இதேபோல் ட்விட்டரில் திருச்சி சூர்யா நடிகர் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் கிஷோரை கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவும் வேகமாக பரவி வருகிறது.
-
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம்












Click it and Unblock the Notifications