லீக் செய்த போட்டோ.. நடிகைக்கு சிஎம் ஆக ஆசை.. விஜய் ரொம்ப மோசம்.. புட்டு புட்டு வைத்த திருச்சி சூர்யா
சென்னை: நடிகர் விஜய்யின் விவாகரத்து, குடும்ப விவகாரம் குறித்து, பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா 'ஒன்இந்தியா தமிழ்' யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் அரசியலில் ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போதெல்லாம், அந்த நடிகை சம்பந்தமே இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிடுகிறார். விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியபோது, அந்த அம்மா ஸ்பெயினில் இருந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டார்.

நான் ஒரு நாள் சிஎம் ஆவேன்'
திடீரென்று 'நான் ஒரு நாள் சிஎம் ஆவேன்' என்று அவர் பேசிய பழைய வீடியோக்கள் ட்ரெண்ட் செய்யப்படுகின்றன. இதெல்லாம் தற்செயலாக நடப்பவை அல்ல; விஜய்யின் பெயரைக் கெடுக்கவோ அல்லது அவர் மீது அழுத்தம் கொடுக்கவோ திட்டமிட்டு செய்யப்படுபவை.
டிசம்பர் மாதமே சங்கீதா தரப்பில் இருந்து நடவடிக்கைகள்
இது வெறும் வதந்தி கிடையாது. டிசம்பர் மாதமே சங்கீதா தரப்பில் இருந்து நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இப்போது நீதிமன்றம் மூலம் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், விஜய் அந்த நோட்டீஸை வாங்க மறுக்கிறார். சட்டம் தன் கடமையைச் செய்யும்; இன்று அல்லது நாளை அவரது வீட்டு வாசலில் அந்த நோட்டீஸ் ஒட்டப்படும். அப்போது இந்த 'தற்குறி' கூட்டத்திற்கு உண்மை என்னவென்று புரியும்
2026-ல் முதல்வர்
நீங்கள் ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், நீங்கள் 2026-ல் முதல்வர் ஆகப்போவதாகச் சொல்கிறீர்கள். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவரின் ஒவ்வொரு அசைவும் விமர்சனத்திற்கு உள்ளாகும். சீமான் போன்றவர்கள் பேசுவதைப் போல நாலு பஞ்ச் டயலாக் பேசிவிட்டுப் போவது அரசியல் அல்ல; உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதைப் பின்பற்றுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
விஜய் மீது 'சுசி லீக்ஸ்'
விஜய் மீது 'சுசி லீக்ஸ்' சமயத்திலேயே பல குற்றச்சாட்டுகள் வந்தன. அவர் போதைப் பழக்கத்திற்கு (Drugs and Alcohol) அடிமையாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஒரு கட்சியின் தலைவராக வரப்போகிறவர் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு வரும்போது, ஏன் அவர் ஒரு 'டெஃபர்மேஷன் சூட்' (அவதூறு வழக்கு) கூட போடவில்லை? விஜய்யின் நெருங்கிய நண்பர்களே, அவர் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில் டிரக்ஸ் இல்லாமல் எதுவும் நடக்காது என்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள். இதற்கு யாரிடம் பதில் இருக்கிறது? என்று பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா 'ஒன்இந்தியா தமிழ்' யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
கோர்ட் நோட்டீஸ்... கலக்கத்தில் கேடர்!
சுமார் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் சங்கீதா தரப்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வரும் ஏப்ரல் 20-ம் தேதி விஜய்யை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக தன் பெர்சனல் விஷயங்களில் 'சைலன்ட்' மோடில் இருக்கும் விஜய், இந்த முறை பொதுவெளியில் விழுந்திருக்கும் இந்த விவகாரத்தால் சற்று அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications