நோபல் பரிசு கிடைக்கலைனா என்ன.. அதைவிட எனக்கு பெரிய கெளரவம் வந்துருச்சு! பூரித்த டொனால்ட் ட்ரம்ப்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சியூட்டும் கருத்தை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள டிரம்ப், அமைதிக்கான நோபல் விருது வென்ற மரியா கொரினா மச்சாடோவே, தன்னைத் தொடர்பு கொண்டு, அந்த விருதுக்கு நான்தான் உரியவன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளாது.

கடந்த சில மாதங்களாகவே அமைதிக்கான நோபல் பரிசு குறித்த விவாகரங்கள் தான் உலக அளவில் எழுந்து இருந்தது. இந்தியா பாகிஸ்தான் போர் உள்ளிட்ட பல போர்களை நிறுத்திய தனக்கு தான் விருது வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வந்தார்.

மேலும் டிரம்புக்கு ஆதரவாக பாகிஸ்தான் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பேசி வந்தனர். மேலும் பல தருணங்களில் தனக்குத் தான் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என மிகவும் நம்பிக்கையுடன் பேசியிருந்தார் ட்ரம்ப்.

donald Trump Nobel Peace price Maria Corina Machado

டொனால்ட் டிரம்ப்

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலா கட்சியின் தலைவர் வின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டவுடன் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "அந்த விருதை வென்ற மரியா கொரினா மச்சாடோ எனக்கு தொலைபேசியில் பேசினார். அவர் என்னிடம், இந்த விருதுக்கு உண்மையில் நீங்கள் தான் உரியவர், நான் அல்ல, என்று சொன்னார்," என கூறியுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு தனது பெயருக்கு தான் வர வேண்டும் என்று டிரம்ப் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தார். "நான் தான் உலகளவில் பல போர்களை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டியவன். எனவே இந்த ஆண்டின் நோபல் பரிசு எனக்கே வழங்கப்பட வேண்டும்," என்று அவர் பல்வேறு கூட்டங்களில் தெரிவித்திருந்தார். ஆனால், நோபல் குழு வெனிசுலா மக்களின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியாக செயல்பட்ட மரியா மச்சாடோவுக்கு பரிசை அறிவித்தது. இதனை வெள்ளை மாளிகை கடுமையாக எதிர்த்தது. பரிசு வழங்கும் குழு "அமைதிக்கான பங்களிப்பை விட அரசியல் காரணங்களை முன்னிறுத்தி விருதைத் தேர்வு செய்கிறது" என டிரம்ப் குற்றம் சாட்டினார்.

மரியா கொரினா மச்சாடோ

ஆனாலும், சில மணி நேரங்களுக்குள் நிகழ்வுகளில் மாற்றம் ஏற்பட்டது. மரியா கொரினா மச்சாடோ தானாகவே டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகவும், "உங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பரிசை நான் ஏற்றுக்கொள்கிறேன். உண்மையில் இதற்குரியவர் நீங்கள் தான்" என்று கூறியதாக டிரம்ப் தெரிவித்தார். இதுபற்றி டிரம்ப் நகைச்சுவையாக, "அவர் மிகவும் நல்லவர். அவர் கேட்டிருந்தால் எனக்கே விருதை கொடுத்திருப்பார்கள். ஆனால் நான் கேட்டதே இல்லை!" என்று கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப்

டிரம்பின் இந்த வாக்குமூலம் குறித்து பலரும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மரியா கொரினா மச்சாடோ வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு டிரம்ப் கூறியதை உறுதி செய்தது. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு அறிவிக்கப்பட்டது வெனிசுலா மக்களின் போராட்டத்துக்கான உலகளாவிய அங்கீகாரம். துயரத்தில் இருக்கும் எங்கள் மக்களுக்காகவும், எங்கள் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவு அளித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்காகவும் இந்தப் பரிசை அர்ப்பணிக்கிறேன்," என பதிவிட்டிருந்தார். இதனால், நோபல் பரிசைச் சுற்றிய அரசியல் விவாதம் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+