வீலிங் செய்தபோது விபத்து.. ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு! டிடிஎஃப் வாசன் அதிரடி கைது
சென்னை: சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் வீலிங் செய்தபோது விபத்து ஏற்பட்ட நிலையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர்.
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் கோவையை சேர்ந்தவர். இவர் விலையுயர்ந்த பைக்குளில் நீண்ட தூரத்திற்கு சென்று சாகசங்களை செய்து அதை வீடியோவாக தனது Twin throttlers எனும் யூடியூப் சேனலில் பதிவு செய்வார்.

அவருடைய சேனலுக்கு 2கே கிட்ஸ்கள் அதிகம் பேர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் டிடிஎஃப் வாசன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சுசுகி ஹயபுஸா பைக்கில் சாகசம் செய்த போது அவர் விபத்தில் சிக்கிவிட்டார். அதிவேகமாக செல்ல முயன்ற போது அவர் வீலிங் செய்ய முயன்றார். அப்போது பைக் நிலைத்தடுமாறி இரண்டு முறை தலைக்குப்புற சுற்றி பள்ளத்தில் விழுந்தது. இதில் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ வெளியாகியிருந்த நிலையில் அதில் அவர் வீலிங் செய்த போது நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவருடைய வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்தபடியே தூரத்தில் போய் விழுந்தது. வாசனும் ஒரு தடுப்பு சுவரை தாண்டி தூக்கிவீசப்பட்ட காட்சிகளும் வாகன ஓட்டிகள் ஓடி சென்று அவரை மீட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக வாசன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் வாசன் வீலிங் செய்த போது அவ்வழியாக நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு வேளை வாசனின் விபத்து அவர்களது வாகனத்திலும் இடித்து அதில் பயணித்தவர்களுக்கு உயிர் சேதத்தையோ காயங்களையோ ஏற்படுத்தியிருந்தால் என்ன செய்வது என பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் போலீஸாரும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதுவும் வாசன் ஜாமீனில் கூட வெளியே வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்துக்கு தமிழக காவல் துறை பரிந்துரை செய்துள்ள நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications